Homeசெய்திகள்தமிழ்நாடுதவெக எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம்: விசாரணைக்கு ஆஜராகாத செந்தில் பாலாஜி, அசோக் குமார் – காவல்துறை...

தவெக எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம்: விசாரணைக்கு ஆஜராகாத செந்தில் பாலாஜி, அசோக் குமார் – காவல்துறை அடுத்தகட்ட அதிரடி!

-

- Advertisement -

செந்தில் பாலாஜி - அசோக்குமார்
தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசி தற்போதைய அரசைக் கவிழ்க்க முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் காவல்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராகாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கின் பின்னணி மற்றும் கைது நடவடிக்கை:

we-r-hiring

தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த , ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (MLA) இளையராஜாவிடம், ஆட்சிக்கு எதிராகச் செயல்படக் கோரி மிரட்டிப் பேரம் பேசியதாகச் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில், ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) ஆகிய சட்டங்களின் கீழ் மொத்தம் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் IPDS நிறுவனர் திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன், கரூரைச் சேர்ந்த கார்த்திக், ரமேஷ், பள்ளிக்கரணையைச் சேர்ந்த செல்வன், மணப்பாக்கத்தைச் சேர்ந்த சீனிவாசன், அஸ்தினாபுரத்தை சேர்ந்த ராஜேஷ் ஆகிய  8 நபர்களைத் திருவல்லிக்கேணி போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர் .
ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜா

முதல் தகவல் அறிக்கையில் (FIR) உள்ள திடுக்கிடும் தகவல்கள்:

எம்.எல்.ஏ இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையின்படி, கடந்த ஜூன் 26-ஆம் தேதி திருநாவுக்கரசு என்பவர் தன்னை ஒரு ‘கருத்துக் கணிப்பு’ நிறுவனம் நடத்தும் நபர் என அறிமுகப்படுத்திக்கொண்டு, தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அவர், “தற்போதைய அரசு நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் உங்களுக்கும் லாபம், எங்களுக்கும் லாபம்.  நீங்கள் உங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சபாநாயகர் மீது கொண்டு வரப்படும் தீர்மானத்தின் போது நாங்கள் சொல்வது போலச் செயல்பட்டால் போதும். அதற்கு கைமாறாக 35 கோடி ரூபாய் வரை பணம் வழங்கப்படும்” என்று பேரம் பேசப்பட்டுள்ளது.

மேலும், “இந்த பேரத்திற்குச் சம்மதித்தால், முக்கிய அரசியல் கட்சியின் சார்பில் நரேஷ் கிருஷ்ணன் மற்றும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் ஆகியோர் நேரில் வந்து பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்துக் கொள்வார்கள்” எனக் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் “நாங்கள் சொல்வதைக் கேட்காவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இந்த விவகாரத்தை யாரிடமாவது கூறினால் நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் உயிருடன் இருக்க மாட்டீர்கள்” என கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு..
செந்தில் பாலாஜி ஆஜராகாததால் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

இந்த பேர விவகாரத்தில் பின்னணியாகச் செயல்பட்டதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகிய இருவருக்கும் விசாரணைக்கு நேரில் ஆஜராகக் காவல்துறை முறைப்படி சமன் (Summons) அனுப்பியிருந்தது .

இருப்பினும், குறிப்பிட்ட கெடுவுக்குள் அவர்கள் இருவரும் விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராகவில்லை .  ஏற்கனவே வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க இவர்களுக்கு எதிராக ‘லுக்அவுட்’ நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள சூழலில் அவர்கள் ஆஜராகாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதனால், காவல்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

தற்போதைய தமிழ்நாடு அரசியலில்  எம்.எல்.ஏக்கள் குதிரைப்பேரம் மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ள நிலையில், காவல்துறையினர் இவர்களைத் தேடப்படும் நபர்களாக அறிவித்து, அடுத்த கட்டமாகக் கைது செய்வதற்கான வாரண்ட் (Warrant) பிறப்பிக்கும் நடவடிக்கைகளில் இறங்கலாம் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

MUST READ