Homeசெய்திகள்தமிழ்நாடு"விஜய்யைப் பார்த்து மோடியே வியந்துட்டாராம்!" – தவெக-வில் ஜால்ரா அடிக்கும் மாஜிக்கள்: ஆர்.பி.உதயகுமார் ஆவேசப் பேட்டி!

“விஜய்யைப் பார்த்து மோடியே வியந்துட்டாராம்!” – தவெக-வில் ஜால்ரா அடிக்கும் மாஜிக்கள்: ஆர்.பி.உதயகுமார் ஆவேசப் பேட்டி!

-

- Advertisement -

தமிழகத்தில் தவெக அரசு அமைந்து கடந்த 50 நாட்களாக அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து நிற்கும் நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய்யைப் புகழ்ந்து பாடுவதில் கூட்டணித் தலைவர்களுக்கும், அதிமுகவிலிருந்து தாவிய ‘அடிப்பொடிகளுக்கும்’ இடையே கடுமையான போட்டி நிலவி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.விஜய்யைப் பார்த்து மோடியே வியந்துட்டாராம்!" – தவெக-வில் ஜால்ரா அடிக்கும் மாஜிக்கள்: ஆர்.பி.உதயகுமார் ஆவேசப் பேட்டி!​சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு – கவலையில் காவல்துறை!
​மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.பி.உதயகுமார், தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலை குறித்துப் பேசுகையில், ​”ஒரு நாட்டில் அமைதி நிலவினால்தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும். சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் குற்றம் சாட்டி, தனக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி தேர்தல் பிரச்சாரம் செய்துதான் விஜய் முதல்வர் அரியணையில் அமர்ந்தார். இன்று தமிழகத்தில் 8 கோடி மக்கள் வாழ்கிறார்கள். ஆனால், மொத்த காவலர்களின் எண்ணிக்கையோ வெறும் 1.50 லட்சம்தான். அதிலும் 90,000 பேர் மட்டுமே சட்டம் ஒழுங்கு பிரிவில் உள்ளனர். மீதமுள்ள 60,000 பேர் 35 சிறப்புப் பிரிவுகளில் பணியாற்றுகின்றனர் என காவல்துறை வட்டாரங்களே கவலையோடு தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு இப்படி தலைவிரித்தாடுகிறது.”

​”விஜய்யைப் பார்த்து மோடியே வியந்துட்டார்” – செங்கோட்டையன் ஜால்ரா!
​தமிழகத்தின் கள நிலவரம் ஒருபுறமிருக்க, தவெக ஆட்சிக்கு வந்தவுடன் அக்கட்சியில் ‘புகழ்மாலை சூட்டும் போட்டி’ கலவரமாக மாறியுள்ளதாக ஆர்.பி.உதயகுமார் சாடினார். ​”சமீபத்தில் தவெக-வுக்கு தாவிய மாற்றுக்கட்சியினரும், கூட்டணித் தலைவர்களும் விஜய்யை யார் அதிகமாக உயர்த்திப் பிடிப்பது என்று போட்டி போடுகிறார்கள். நேற்று அமைச்சர் செங்கோட்டையன், ‘விஜய்யைப் பார்த்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடியே வியந்து போயிருக்கிறார். அடுத்த பிரதமர் வேட்பாளர் விஜய் என்று சொன்னாலும் சொல்வார்கள்’ எனப் புகழ் பாடி, தவெக-வில் முதலிடத்தைப் பிடிக்க முந்துகிறார். ​பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்களை எல்லாம் விஜய்யின் வடிவில் பார்ப்பதாகச் செங்கோட்டையன் பின்னால் சென்ற அதிமுகவின் அடிப்பொடிகள் கூறுவதைக் கேட்டு விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளே அசந்து போயிருக்கிறார்கள். ‘விஜய்க்கு வரும் கணைகளுக்குக் கவசமாக இருப்போம்’ என வைகோ விசுவாசத்திற்குப் புதிய விலாசம் தேடுகிறார். கூட்டணிக்கு முன்பு வரை விஜய்யை வறுத்தெடுத்தவர்கள், அவர் முதலமைச்சரானவுடன் அடிக்கும் ஜால்ராவைப் பார்த்து விஜய்க்கே ஜன்னி காய்ச்சல் வந்துவிட்டது.”

we-r-hiring

​”50 நாட்களாக நிர்வாகம் முடக்கம்: விஜய்க்கு நேரம் போகவில்லை!”
​அரசு நிர்வாகத்தின் மெத்தனப் போக்கு குறித்துப் பேசிய அவர், “கடந்த 50 நாட்களாகத் தமிழ்நாட்டில் அரசு நிர்வாகம் தங்கித் தடுமாறி நிற்கிறது. ஆனால், மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய முதல்வர் விஜய்க்கு நேரம் போகவில்லை. அதிமுகவின் ஆயுளை முடிக்க வேண்டும் என்பதை மட்டும்தான் அவர் தனது தலையாய கடமையாக நினைத்துக் கொண்டிருக்கிறார். பிறகு பிரச்சினைகளைத் தீர்க்க எங்கே நேரம் இருக்கப் போகிறது?” என்று கேள்வி எழுப்பினார்.விஜய்யைப் பார்த்து மோடியே வியந்துட்டாராம்!" – தவெக-வில் ஜால்ரா அடிக்கும் மாஜிக்கள்: ஆர்.பி.உதயகுமார் ஆவேசப் பேட்டி!

​”அதிமுகவை அழிக்க எவனும் பிறக்கவில்லை!” – 100 விஜய் வந்தாலும் முடியாது
​அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் தவெக-வுக்குத் தாவுவது குறித்து ஆர்.பி.உதயகுமார் அதிரடியாகப் பதிலளித்தார், “அதிமுகவில் அதிகாரத்தை அனுபவித்துவிட்டு, கட்சிக்காக உழைக்க வேண்டிய நேரத்தில் காட்டிக் கொடுத்துவிட்டு ஓடுவது ஒன்றும் எங்களுக்குப் புதியதல்ல. எம்.ஜி.ஆர் காலத்திலும், அம்மா காலத்திலும், எடப்பாடியார் காலத்திலும் இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இப்படி ஓடுகிறவர்களின் கண்றாவி காட்சியைக் கண்டு சலித்துப் போன தொண்டர்கள், கண்ணீரைக் காணிக்கையாக்கி, முன்பை விட வேகமாக உழைத்து மீண்டும் அதிமுகவை ஆட்சிப் பீடத்தில் அமர்த்திய வரலாறு இந்த ‘முதல்வர்’ விஜய்க்குத் தெரியாது. ​ஒரே ஒரு விஜய் அல்ல, இன்னும் 100 விஜய் அவதாரம் எடுத்து வந்தாலும் தமிழ்நாட்டு மக்களும், ரத்தத்தின் ரத்தமான அண்ணா திமுக தொண்டர்களும் இந்தக் கழகத்தை ஒருநாளும் கைவிட மாட்டார்கள். அதிமுகவை அழிக்க இந்த பூமியில் எவனும் பிறக்கவில்லை, இனியும் பிறக்கப் போவதில்லை! அதிகாரத்தை நோக்கி ஓடும் போலிகளை நம்பி அதிமுக என்றுமே வாழ்ந்ததில்லை. வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும், செத்தாலும் அண்ணா திமுகதான் என்று கோடான கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். அதிமுகவை அழிக்க நினைக்கும் விஜய்க்கு, வரவிருக்கும் இடைத்தேர்தலில் தமிழக மக்கள் தகுந்த தீர்ப்பை வழங்குவார்கள்” என ஆர்.பி.உதயகுமார் ஆவேசமாகத் தெரிவித்தார்.

மயிலாடுதுறை ஆணவக் கொலை: எங்கே போனது தவெக அரசின் வேகம்? திருமா, திமுக மீதான விமர்சனங்களும், விசிகவின் ‘சாதி அரசியல்’ முரண்பாடுகளும்!

MUST READ