தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்து வரும் நிலையில், மயிலாடுதுறையில் அரங்கேறியுள்ள கொடூரமான ஆணவக் கொலை விவகாரம் தற்போதைய தமிழக வெற்றிக் கழகம் அரசு மற்றும் கூட்டணி கட்சிகளின் இரட்டை நிலையை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாக ஆளும் தரப்போ, எதிர்க்கட்சியோ போதிய அளவில் எதிர்வினையாற்றாத சூழலில், சமூக வலைதளங்களிலும் அரசியல் தளங்களிலும் கடுமையான விவாதங்கள் எழுந்துள்ளன.
தவெக ஆட்சியில் ஆக்ஷன் இல்லை: திமுக ஆட்சியாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
தமிழகத்தில் தவெக அரசு அமைந்து, “நாங்கள் அதிகாரத்தை அடைந்துவிட்டோம், ஆட்சியில் பங்கு பெற்றுவிட்டோம்” என்று கூட்டணிக் கட்சிகள் பெருமை பேசிக் கொள்ளும் இதே வேளையில், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான ஆணவக் கொலைகள் தொடர்வது பெரும் அவலமாகப் பார்க்கப்படுகிறது.

காவல்துறையின் மௌனம்
இந்த ஆணவக் கொலைக்கு எதிராக காவல்துறை தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு விரிவான விளக்கமோ, கடுமையான எச்சரிக்கை அறிக்கையோ வரவில்லை.
அமைச்சர்கள் எங்கே?
பதட்டத்தைத் தணிக்கும் வகையிலோ அல்லது குற்றவாளிகளுக்குத் தக்க பாடம் புகட்டப்படும் என்றோ அமைச்சர்கள் தரப்பில் இருந்தும் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்க வந்த ஆளும்கட்சி நிர்வாகிகளின் பட்டியலும் இதுவரை இல்லை.
விமர்சகர்களின் ஒப்பீடு
இதுவே கடந்த திமுக ஆட்சியாக இருந்திருந்தால், பொறுப்பு அமைச்சர் உடனடியாகப் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறியிருப்பார். முதலமைச்சரின் அறிவுறுத்தல்கள் காவல்துறைக்குச் செய்தியாகப் பறந்திருக்கும். முதற்கட்ட நிவாரணம் உடனே கிடைத்திருக்கும்; மக்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டிய அவசியமே இருந்திருக்காது. ஆனால் தவெக ஆட்சியில் போராடினால் மட்டுமே நிவாரணம் என்ற நிலை உருவாகியுள்ளது.
மீசையை முறுக்கும் ‘திருமா’… மாமல்லபுரம் கூட்டணி மௌனம் ஏன்?
”அதிகாரப் பசியில்” மேடைகளில் லைவ் போட்டுப் பேசும் விசிக தலைவர் தொல்.திருமாவளவனின் சமூக வலைதள டைம்லைன்களில் இந்த மயிலாடுதுறை கொலை குறித்து எந்தவொரு வலுவான பதிவும் இல்லை. அவர் தற்போதும் மாநாட்டு குழுக்களைச் சந்திப்பதிலேயே பிஸியாக இருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அண்மையில் மாமல்லபுரத்தில் “ஒரே கூட்டணி” என்று கைகோர்த்துப் போஸ் கொடுத்த கட்சிகள் (விசிக, மதிமுக, ஐயுஎம்எல், காங்கிரஸ்), அங்கிருந்தபடியே இந்த ஆணவக்கொலைக்கு எதிராக ஒரு கூட்டறிக்கையைக் கூட வெளியிடாதது ஏன்? மயிலாடுதுறை தொகுதி எம்பியான காங்கிரஸ் கட்சியின் சுதா, தங்களின் கூட்டணிதானே? அவர் ஏன் இன்னும் களத்திற்கு வரவில்லை? தமிழ்நாடெங்கும் கிளை உள்ள கட்சி என்று முழங்கும் மதிமுக எங்கே போனது? “வெறும் சோற்றுக்காக மட்டும்தான் ஒன்றாக ஓடுகிறீர்களா?” என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
”என்ன டிமாண்ட் வைக்கிறீங்க?” – திருமா மீதான ‘கட்டப்பஞ்சாயத்து’ விமர்சனம்
திமுகவை நோக்கி சகட்டுமேனிக்குக் கேள்விகளை எழுப்பும் விசிகவினர், தங்களை “உண்மையான விசிக” என்று சொல்லிக் கொள்ளத் தகுதியற்றவர்கள் என நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகின்றனர். விசிக தலைவர் திருமாவளவன் இக்கொலை விவகாரத்தில் அதிகாரிகளிடம் பேசும் ஆடியோவை ஸ்பீக்கரில் போட்டு ஒருவர் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு தலைவருக்குரிய கம்பீரத்தோடு பேசாமல், “அவங்ககிட்ட என்ன டிமாண்ட் வைக்கிறீங்க?” என்று திருமா கேட்பது, ஒரு கட்சியின் தலைவரா அல்லது “கட்டப்பஞ்சாயத்து” செய்பவரா பேசுகிறார் என்ற ரீதியில் அவரது மானத்தை வாங்கும் விதமாக அமைந்துள்ளது.
ஒரே நாளில் 12 கொலைகள்: விசிக ஒரு சாதிக்கட்சியா?
மயிலாடுதுறை கொடூரம் நடந்த அதே நாளில் தமிழகத்தில் பண்ருட்டியில் நடுரோட்டில் வெட்டிக்கொலை, மற்றொரு இடத்தில் தலையில் பாராங்கல் போட்டு கொடூரக் கொலை என மொத்தம் 12 கொலைகள் அரங்கேறியுள்ளன. மயிலாடுதுறையில் மட்டும் போராட்டம் நடத்திய விசிக மற்றும் முற்போக்கு அமைப்பினர், மற்ற 11 கொலைகளுக்கு எதிராக ஏன் மூச்சுக்கூட விடவில்லை? அந்தப் படுகொலைகளில் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் ஆதிக்க சாதியினர் என்பதால் விசிகவிற்கு வலிக்கவில்லையா? அப்படியென்றால் விசிக என்பது ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்டோருக்கான இயக்கமா அல்லது குறிப்பிட்ட ஒரு சாதிக்கான கட்சியா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
