spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்கிட முதல்வர் உத்தரவு…

நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்கிட முதல்வர் உத்தரவு…

-

- Advertisement -

கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் இரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என் இஸ்லாமிய மக்கள் கோாிக்கை வைத்துள்ளனா்.நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்கிட முதல்வர் உத்தரவு…ஒவ்வொரு ஆண்டும் புனித இரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்புக் கஞ்சி தயாரித்து வழங்கும் பொருட்டு பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே, 2026–ஆம் ஆண்டிலும் இரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

2026–ஆம் ஆண்டு, இரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாக பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின்கீழ் நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களுக்கு பச்சரிசி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

we-r-hiring

பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, 8,700 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு 20 கோடியே 88 இலட்சம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவது ஏன்?  – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

 

MUST READ