Homeசெய்திகள்தமிழ்நாடுகாங்கிரஸ் கட்சியை கோஷ்டிப் பூசல் இல்லாத வலுவான அமைப்பாக மாற்றுவதே இலக்கு – மாணிக்கம் தாகூர்...

காங்கிரஸ் கட்சியை கோஷ்டிப் பூசல் இல்லாத வலுவான அமைப்பாக மாற்றுவதே இலக்கு – மாணிக்கம் தாகூர் பேட்டி!

-

- Advertisement -

தமிழக காங்கிரஸ் கட்சியில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், கோஷ்டிப் பூசல் இல்லாத வலுவான, இளமையான அமைப்பாகக் கட்சியை மாற்றுவதே நோக்கம் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியை கோஷ்டிப் பூசல் இல்லாத வலுவான அமைப்பாக மாற்றுவதே இலக்கு – மாணிக்கம் தாகூர் பேட்டி!

தென்காசியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கட்சியின் தற்போதைய செயல்பாடுகள், தொகுதி மறுவரையறை, இடைத்தேர்தல் மற்றும் சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசினார்.

அப்போது, காங்கிரஸ் கட்சியில் தற்போது மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், ராகுல் காந்தியின் நோக்கத்தின்படி கட்சியை அமைப்பு ரீதியாக வலுப்படுத்தவும், கோஷ்டிப் பூசல்கள் இல்லாத இளமையான காங்கிரஸ் அமைப்பை உருவாக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்துப் பேசிய அவர், கடந்த ஏப்ரல் மாதமே முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த விவகாரத்தில் எதிர்ப்புக் குரல் எழுப்பியதாகவும், வட இந்தியாவின் குரல் நாடாளுமன்றத்தில் அதிகரித்து தமிழகத்தின் குரல் ஒலிக்காமல் போகும் அபாயம் இருப்பதாக அவர் தெரிவித்த கருத்தைத் தாங்களும் ஆதரிப்பதாகவும் கூறினார்.

தொகுதி மறுவரையறையை யார் ஆதரித்தாலும் அது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் துரோகம் என்பதே தங்களது நிலைப்பாடு என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தலாம் எனக் கூறப்படுவது வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத நடைமுறை என அவர் விமர்சித்தார்.

எந்தத் தேர்தல் எப்போது நடைபெற்றாலும் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியே வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.

மேலும், சிறுபான்மை மக்களுக்குத் தொகுதி மற்றும் பிரதிநிதித்துவம் கிடைக்கக் கூடாது என்பதே பாஜகவின் கொள்கை என்றும், அதற்காகவே தொகுதி மறுவரையறை கொண்டுவரப்படுவதாகவும் குற்றம்சாட்டிய அவர், இதனை ஆதரிக்கும் கட்சிகள் சிறுபான்மையினருக்கு எதிரான கட்சிகளாகக் கருதப்படும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து, தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் குறித்த விவரங்களை காவல்துறை மாதந்தோறும் வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.

முந்தைய மாதத்தில் பதிவான குற்றங்களின் எண்ணிக்கையையும் தற்போதைய மாதக் குற்றங்களின் எண்ணிக்கையையும் மறைக்காமல் வெளியிட்டால், குற்றச் சம்பவங்களைக் கண்காணிக்கவும் அவற்றைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவும் உதவும் என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

தொகுதி மறுவரையறை மசோதா: திமுக கடந்த முறை போல இந்த முறையும் முன்முயற்சி எடுக்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்!

MUST READ