Homeசெய்திகள்தமிழ்நாடுதுணை சபாநாயகர் ரவி சங்கர் தாக்கியதாக எழுந்த புகார்:  உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

துணை சபாநாயகர் ரவி சங்கர் தாக்கியதாக எழுந்த புகார்:  உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

-

- Advertisement -

Deputy Speaker Ravi Shankar

  துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகருமான மு. ரவிசங்கர் மற்றும் மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் கிருபாநிதி  ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், முழு விவரங்களையும் வரும் செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்குமாறு அரசுத் தரப்பிற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மனுவில் கூறப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல்கள்

திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த செய்தியாளரான கார்த்திக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

  • மனு அளிக்கச் சென்றபோது தாக்குதல்: கடந்த மாதம் துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான மு. ரவிசங்கரிடம் மக்கள் சார்ந்த கோரிக்கை மனு ஒன்றை அளிப்பதற்காகச் சென்றேன். அப்போது துணை சபாநாயகர், “யார்ரா நீ?” என ஒருமையில் கேட்டுத் தன்னை உருட்டுக்கட்டையால் தாக்கிக் காயப்படுத்தினார். அந்தச் சம்பவத்தின்போது எனது 3 சவரன் நகையும் காணாமல் போனது.

  • புகாரை மாற்றிப் பதிவு செய்த காவலர்கள்: தாக்குதலில் காயமடைந்த நான், மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன். அங்கு விசாரணைக்கு வந்த காவலர்களிடம், துணை சபாநாயகர் தாக்கியதால்தான் காயம் ஏற்பட்டது எனத் தெரிவித்தேன். ஆனால், காவலர்கள் அதனை மறைத்து, “அடையாளம் தெரியாத நபர் தாக்கியதில் காயம் ஏற்பட்டது” எனத் தவறாகப் பதிவு செய்தனர்.

  • கட்டாயப்படுத்தி மறுப்பு வீடியோ பதிவு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என்னை, மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் கிருபாநிதி கட்டாயப்படுத்தித் துணை சபாநாயகர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு, “என்னை யாரும் தாக்கவில்லை” எனக் கூறி மறுப்பு வீடியோ பதிவு செய்யுமாறு என்னை நிர்பந்தித்தனர்.
    சமூகநீதி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது” – எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகள் குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தி!

  • குடும்பத்தினருக்கு மிரட்டல்: நான் வீடியோ கொடுக்க மறுத்தபோது, துணை சபாநாயகர் என்னைத் தகாத வார்த்தைகளால் திட்டி, “நான் யார் தெரியுமா? நான் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வேன், என்னை ஒன்றும் செய்ய முடியாது” என மிரட்டினார். மேலும், எனது குடும்பத்தினர் மீது பொய் வழக்குப் போட்டுவிடுவதாகவும் மிரட்டல் விடுத்தார். இதனால் அச்சமடைந்த நான், அவர்கள் சொல்லிக்கொடுத்ததைக் கூறினேன்; அதனை அவர்கள் வீடியோவாகப் பதிவு செய்து கொண்டனர். வேறு எந்த வீடியோவையும் வெளியிடக் கூடாது என மிரட்டி என்னை அனுப்பி வைத்தனர்.

நீதிமன்றத்தின் உத்தரவு

இந்தச் சம்பவம் குறித்துச் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ள மனுதாரர் கார்த்திக்குமார், துணை சபாநாயகர் மு. ரவிசங்கர் மற்றும் மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் கிருபாநிதி ஆகியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கத் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு (SP) உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு தொடர்பான முழு விவரங்களையும் வரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும், அதுவரை கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் முழு விவரங்களையும் வரும் செவ்வாய்க்கிழமை அரசுத் தரப்பு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

https://www.apcnewstamil.com/news/district-news-tamil/rasipuram-electric-shock-accident-worker-dies-two-injured/253943

MUST READ