spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது… கேட்பதால் கூட்டணி உடையாது - திருமாவளவன் பேட்டி

அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது… கேட்பதால் கூட்டணி உடையாது – திருமாவளவன் பேட்டி

-

- Advertisement -

கூட்டணியை பாதுகாப்பதில் அக்கறையோடு இருக்கிறோம். கேட்பதால் கூட்டணி உடையாது. அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது என விசிக தலைவர் திருமாவளவன் பேட்டியளித்துள்ளாா்.அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது… கேட்பதால் கூட்டணி உடையாது - திருமாவளவன் பேட்டிதிருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று அளித்த பேட்டியில், “ திருச்சி- தஞ்சை சாலை அரியமங்கலம் பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை சர்வீஸ் சாலை அமைக்க வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சிகள், கட்சி சார்பற்ற அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன. சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டுமென உயர் நீதிமன்றமும் கூறியுள்ளது. தமிழக அரசும், ஒன்றிய அரசும் சர்வீஸ் சாலை அமைப்பதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் இருக்கும். அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது.

கூட்டணியை பாதுகாப்பதில் அக்கறையோடு இருக்கிறோம். கேட்பதால் கூட்டணி உடையாது. அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது. எங்களது கோரிக்கைகளை பேச்சுவார்த்தையில் வைப்போம். இந்த கூட்டணியை உருவாக்கியதில் எங்கள் பங்கும் இருக்கிறது. திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கான கோரிக்கை அல்ல. ஒட்டுமொத்தமாக மக்களின் கோரிக்கை. தமிழ்நாட்டில் மதுக்கடைகளை படிப்படியாக குறைத்து முற்றிலும் மூட வேண்டும் என்ற கோரிக்கையை விசிக மாநாட்டில் இருந்து வலியுறுத்தி வருகிறோம். அந்த நிலைப்பாட்டில் இன்றும் உள்ளோம்” என விசிக தலைவர் திருமாவளவன் பேட்டியளித்துள்ளாா்.

திருப்பரங்குன்றம் தீர்ப்பை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யவேண்டும் – தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

we-r-hiring

 

MUST READ