Homeசெய்திகள்தமிழ்நாடு"காவல் மரணங்களில் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை; யாரையும் காப்பாற்ற மாட்டோம்" - அமைச்சர்...

“காவல் மரணங்களில் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை; யாரையும் காப்பாற்ற மாட்டோம்” – அமைச்சர் டி.சி.ஆர். நிர்மல் குமார் அதிரடி

-

- Advertisement -

​நாகர்கோவில் மற்றும் புழல் சிறை மரணங்கள் தொடர்பாக தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் காப்பாற்றும் எண்ணம் இந்த அரசுக்கு இல்லை என்றும் சட்டத்துறை அமைச்சர் டி.சி.ஆர். நிர்மல் குமார் உறுதிபடத் தெரிவித்துள்ளார்."காவல் மரணங்களில் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை; யாரையும் காப்பாற்ற மாட்டோம்" - அமைச்சர் டி.சி.ஆர். நிர்மல் குமார் அதிரடி

​சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், பல்வேறு முக்கியக் கேள்விகளுக்குப் பதிலளித்தார். செய்தியாளர் சந்திப்பின் முக்கிய விவரங்கள் பின்வருமாறு,

we-r-hiring

​காவல் மரணங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை
​நாகர்கோவில் லாக்-அப் மரணம் குறித்துப் பேசிய அமைச்சர், “இந்த விவகாரத்தில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். தவறு நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதில் யாரையும் காப்பாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை. அதேபோல் புழல் சிறை மரணம் தொடர்பாகவும் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இதிலும் தவறுகள் கண்டறியப்பட்டால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். ​பாதிக்கப்பட்ட குடும்பங்களை நான்கு நாட்களாகியும் அமைச்சர்கள் நேரில் சந்திக்கவில்லை என்ற கேள்விக்கு, “அமைச்சரவைக் கூட்டம் தற்போதுதான் முடிவடைந்துள்ளது. இன்று எங்களது அமைச்சர்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறுவார்கள். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இந்த அரசு எப்போதும் துணையாக நிற்கும்” என்று பதிலளித்தார்.

​தவெக தேர்தல் அறிக்கை விவகாரம்: அமைச்சர் மழுப்பல் பதில்
​”காவல் மரணங்கள் என்பது ஒரு அரசின் நிர்வாகத் தோல்வி” எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு நேரடியாகப் பதிலளிப்பதைத் தவிர்த்த அமைச்சர் நிர்மல் குமார், “தவறு செய்தவர்களுக்குத் துணை போகும் அரசு இந்த அரசு இல்லை. தவறு செய்தவர்கள் மீது கண்டிப்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மழுப்பலாகப் பதிலளித்தார். ​தொடர்ந்து பேசிய அவர், “திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்கின்றன என்றுதான் நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம்” என்றும் குறிப்பிட்டார்.

​பத்திரப்பதிவுத் துறை சீரமைப்பு & ஊழல் புகார்கள்
​கடந்த கால பத்திரப்பதிவுத் துறையின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அமைச்சர், “கடந்த 5 ஆண்டுகளில் பத்திரப்பதிவுத் துறை எப்படிச் செயல்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது இந்தத் துறையைச் சீரமைக்கும் பணிகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதில் எந்தவிதத்திலும் அதிகார மையத்திற்குத் தொடர்பு இல்லை. இதுகுறித்த முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முறையான புகார் அளிக்கப்பட்டால், நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: நீட், மேகதாது விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு!

MUST READ