spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபேரறிஞர் அண்ணா பெரிதும் வியந்த மாமேதை சிங்காரவேலர் – முதல்வர் புகழாரம்

பேரறிஞர் அண்ணா பெரிதும் வியந்த மாமேதை சிங்காரவேலர் – முதல்வர் புகழாரம்

-

- Advertisement -

விடுதலைப் போராளி, இந்தியப் பொதுவுடைமை இயக்க முன்னோடி, ‘சிந்தனைச் சிற்பி’ சிங்காரவேலர் பிறந்தநாளுக்கு வாழ்த்துகளை முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.பேரறிஞர் அண்ணா பெரிதும் வியந்த மாமேதை சிங்காரவேலர் – முதல்வர் புகழாரம்மேலும் இது குறித்து தமிழ் நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தந்தை பெரியாருடன் குடிஅரசில் இணைந்த பேரறிஞர் அண்ணா பெரிதும் வியந்த மாமேதை சிங்காரவேலர் அவர்கள்! சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அவருக்குச் சிலை அமைத்து, அந்த அலுவலகத்துக்குச் ‘சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் மாளிகை’ என்றே பெயரும் சூட்டியவர் நம் தலைவர் கலைஞர். இந்தியாவில் முதன்முறையாக மே 1 உழைப்பாளர் நாளைச் செவ்வண்ணக் கொடியேற்றிக் கொண்டாடி, தொழிலாளர் நலனுக்காகத் தம் வாழ்வையே அர்ப்பணித்த சிங்காரவேலரின் புகழைத் தொடர்ந்து போற்றுவோம்! இனி வரும் தலைமுறைகளுக்குப் பாடமாகச் சொல்வோம்! என தமிழ் நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்தவர் தந்தை பெரியார் – முதல்வர் புகழாரம்

we-r-hiring

 

 

MUST READ