Homeசெய்திகள்தமிழ்நாடுசெஸ் தொடரில் பட்டம் வென்ற வைஷாலிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் – டி.டி.வி.தினகரன்

செஸ் தொடரில் பட்டம் வென்ற வைஷாலிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் – டி.டி.வி.தினகரன்

-

- Advertisement -

தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் செல்வி.வைஷாலி, ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பட்டம் வென்றதற்கு எனது மனமாா்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.செஸ் தொடரில் பட்டம் வென்ற வைஷாலிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் – டி.டி.வி.தினகரன்இதுகுறித்து அ.ம.மு.க பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் எக்ஸ் தளப்பக்கத்தில், “சைப்ரஸ் நாட்டில் உள்ள பாஃபோஸ் (Paphos) நகரில் நடைபெற்ற ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் (FIDE Candidates 2026 tournament ) பட்டம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் செல்வி.வைஷாலி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர் பயிற்சி மற்றும் தளராத தன்னம்பிக்கையால் வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்து உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தயாராகியிருக்கும் செல்வி.வைஷாலி அதிலும் வெற்றிவாகை சூடி ஒட்டுமொத்த இந்திய திருநாட்டிற்கும் பெருமையைத் தேடித்தந்திட வேண்டும் என மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்” என டி.டி.வி தினகரன் கூறியுள்ளாா்.

தமிழ்நாடு எந்தவகையிலும் பெண்களுக்கு பாதுகாப்பானது அல்ல – டி.டி.வி தினகரன் ஆவேசம்

we-r-hiring

 

MUST READ