Homeசெய்திகள்தமிழ்நாடுமுதல்வரின் அறைகூவலின் எதிரொலி… வீடுகளில் கருப்பு கொடி ஏற்றிய பொதுமக்கள்

முதல்வரின் அறைகூவலின் எதிரொலி… வீடுகளில் கருப்பு கொடி ஏற்றிய பொதுமக்கள்

-

- Advertisement -

ஒன்றிய அரசின் தொகுதி மறுவரை திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறைகூவலை ஏற்று அவருக்கு ஆதரவாக பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்துள்ளானர்.

முதல்வரின் அறைகூவுலக்கு எதிரொலி… வீடுகளில் கருப்பு கொடி ஏற்றிய பொதுமக்கள்

we-r-hiring

இன்று நடைபெற உள்ள சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒன்றிய பாஜக அரசு தொகுதி மறு வரை திருத்த மசோதா தாக்கல் செய்ய உள்ளது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் மற்றும் தென்னிந்திய மாநில தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு க ஸ்டாலின் இந்த சிறப்பு திருத்த மசோதாவிற்கு எதிராக திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

அந்த வகையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் காலையில் கருப்பு கொடி ஏற்றியும் தொகுதி மறு வரை திருத்த மசோதா நகலை நிறுத்தும் தனது எதிர்ப்பை தெரிவித்தார். அதே போன்று திமுக முக்கிய தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைமை அலுவலகங்களில் கருப்புக் கொடி ஏற்றி ஆதரவு தெரிவித்தனர்.  பொதுமக்களும் முதலமைச்சரின் அறைகூவலருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினர். சென்னை டிபி சத்திரம் பகுதியில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி ஒன்றிய பாஜக அரசு கொண்டுவரவுள்ள தொகுதி மறுவரை திருத்த மசோதாவிற்கு எதிராக தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

தமிழரை அகதிகளாக்கும் கருப்புச் சட்ட நகலை எரித்து மற்றுமொரு தீயினை பற்ற வைத்திருக்கிறேன் – முதல்வர்

MUST READ