Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு நிபந்தனை தளர்வு! கரூர் நீதிமன்றக் கிளை அதிரடி உத்தரவு!

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு நிபந்தனை தளர்வு! கரூர் நீதிமன்றக் கிளை அதிரடி உத்தரவு!

-

- Advertisement -

கரூர் காவல் நிலையத்திற்குப் பதிலாக சென்னையில் கையெழுத்திட உயர் நீதிமன்றம் அனுமதி!செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு நிபந்தனை தளர்வு! கரூர் நீதிமன்றக் கிளை அதிரடி உத்தரவு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, அவர் கரூருக்குப் பதிலாக சென்னையில் உள்ள காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனையை மாற்றி அமைத்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

we-r-hiring

கரூரில் சோதனைக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மீது கரூர் மாவட்ட போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அசோக் குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், “நான்கு வார காலத்திற்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் கரூர் நகர காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்” என்ற நிபந்தனையுடன் அவருக்கு முன்ஜாமீன் வழங்கியிருந்தது.

அசோக் குமார் தரப்பு மேல்முறையீட்டு மனு
இதற்கிடையில், சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்திலும் அசோக் குமார் மீது மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் முன்ஜாமீன் பெற்றிருந்தார். அதற்கு, “மறு உத்தரவு வரும் வரை தினமும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்” என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. ஒரே நேரத்தில் சென்னை மற்றும் கரூர் என இரு வேறு நகரங்களில் உள்ள காவல் நிலையங்களில் ஆஜராகி நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் பெரும் சிரமம் இருப்பதாகக் கூறி அசோக் குமார் மீண்டும் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், கரூரில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையை மாற்றி, சனிக்கிழமைகளிலும் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்திலேயே ஆஜராக அனுமதிக்குமாறு கோரியிருந்தார்.

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
இந்த மனு நீதிபதி ராஜசேகர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் அசோக் குமார் தரப்பில் மூத்த வழக்கறிஞர் இளங்கோ ஆஜராகி வலுவான வாதங்களை முன்வைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, அசோக் குமாரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். அதன்படி, நான்கு வார காலத்திற்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் கரூர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராவதற்குப் பதிலாக, சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்திலேயே ஆஜராகி கையெழுத்திடலாம் என நிபந்தனையை மாற்றி அமைத்து நீதிபதி உத்தரவிட்டார். உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அசோக் குமாருக்கு தற்காலிக நிம்மதியை அளித்துள்ளது.

ரெஸ்ட்ரோ பார்களுக்கு அனுமதி வழங்க தமிழக அரசு திட்டம்??

MUST READ