spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"தமிழ்நாட்டின் தொழில்துறை வலுவான கட்டமைப்புடன் உள்ளது" - ஜெயரஞ்சன்

“தமிழ்நாட்டின் தொழில்துறை வலுவான கட்டமைப்புடன் உள்ளது” – ஜெயரஞ்சன்

-

- Advertisement -

தமிழ்நாட்டின் தொழில்துறை வலுவான கட்டமைப்புடன் உள்ளதாக மாநில திட்டக் கழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளாா்.

"தமிழ்நாட்டின் தொழில்துறை வலுவான கட்டமைப்புடன் உள்ளது" - ஜெயரஞ்சன்

we-r-hiring

2025-26 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மாநில திட்டக் கழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் இந்த அறிக்கையை வழங்கியதுடன். கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் பல்வேறு துறைகளில் கணிசமாக வளர்ச்சி அடைந்துள்ளதாக ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாட்டின் தொழில்துறை கட்டமைப்பு வலுவாக இருப்பதால், மாநிலம் வேகமான முன்னேற்றத்தை பதிவு செய்து வருவதாக அவர் கூறினார். குறிப்பாக, மின்னணு சாதன பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு பிரமாண்டமான வளர்ச்சியை அடைந்துள்ளது. முன்பு இறக்குமதி செய்யப்பட்ட உதிரிபாகங்கள் தற்போது தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதேசமயம், தமிழ்நாட்டில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகமாகவும் இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது எதிர்கால திட்டமிடலில் கவனிக்க வேண்டிய அம்சமாக இருப்பதாகவும் கூறினார்.

கடந்த  5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் விலைவாசி எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றி ஆய்வறிக்கை கூறப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் உணவுப் பொருட்கள் விநியோகத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு தாக்கம் தமிழ்நாட்டில் பெரிதாக இல்லை என்றும் விளக்கப்பட்டுள்ளது.

காலணி உற்பத்தித் துறையிலும் தமிழ்நாடு முன்னேற்றம் கண்டுள்ளது. உலகம் முழுவதும் தோல் அல்லாத காலணிக்கு அதிக  தேவை உருவாகியுள்ள நிலையில்,  தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்துறையில் 90 சதவீதம் பெண்கள் பணிபுரிவது முக்கிய அம்சமாகும். இது பெண்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.

மரபுசார்ந்த வாகனங்கள் உற்பத்தியில் மட்டுமின்றி மின்சார வாகன உற்பத்தியிலும் தமிழ்நாடு வலுவாக முன்னேறியுள்ளது. இதன் மூலம் பசுமை பொருளாதாரத்திற்கான மாற்றத்திலும் மாநிலம் முக்கிய பங்காற்றுகிறது.

மேலும், கப்பல் கட்டும் தொழிலில் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய வாய்ப்பு உருவாகியுள்ளது.  தூத்துக்குடியில் பல லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் 3 நிறுவனங்கள் கப்பல் கட்டும் தளங்களை அமைக்க திட்டமிட்டுள்ளன. ஜவுளி மற்றம் காலணி உற்பத்தி துறைகளை விட அதிக வேலைவாய்புகளை கப்பல் கட்டும் துறை உருவாக்கும் என்று எதிர்ப்பார்க்ப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பல கிளைத் தொழில்களும் உருவாகும் வாய்ப்பு உள்ளது.

அதே நேரத்தில்,  காலநிலை மாற்றத்தால் வேளாண்துறைியல் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதையும் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதனை எதிர்கொள்ள திட்டமிட்ட நடவடிக்கைகள் அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மொத்தத்தில், தொழில்துறை வளர்ச்சி, கல்வி முன்னேற்றம், வேலைவாய்ப்பு விரிவு மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட விலைவாசி ஆகியவை தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தியுள்ளன என மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்தார்.

5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது – ஜெயரஞ்சன் பெருமிதம்

MUST READ