சூப்பர் ஹிட் படத்தின் இயக்குனர்… ஆர்யா & கௌதம் கார்த்திக் காம்போவின் புதிய படம்

ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் காம்போ புதிய படத்திற்காக கூட்டணி அமைக்க இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விஷ்ணு விஷால் நடிப்பில் மனு ஆனந்த் இயக்கத்தில் வெளியான ‘எஃப்ஐஆர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

பிரின்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பின் கீழ் மனு ஆனந்த் புதிய படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் இணைந்து நடிக்கின்றனராம்.

ஆர்யா தற்போது முத்தையா இயக்கத்தில் ‘முத்துராமலிங்கம் என்ற காதர் பாட்ஷா’ படத்தில் நடித்த முடித்துள்ளார். படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. படம் முத்தையாவின் வழக்கமான படங்கள் போலவே கிராமத்துக் கதைக்களத்தில் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது.

இதற்கிடையில் கௌதம் கார்த்திக் சிம்புவுடன் நடித்த ‘ பத்து தல’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் என இரு அதிரடி ஹீரோக்கள் இணைந்து இருப்பதால் படம் மாஸ் ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகும் என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

Advertisement