தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைத்துள்ளார்.
இப்படம் மூன்று பாகங்களாக வெளியாகியிருக்கிறது. இதில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன், சந்திப் கிஷன், ஜான் கொக்கேன், நிவேதிதா சதீஷ், சிவராஜ் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் தனுஷின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாகவும் ஹாலிவுட் தரத்திலும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களுடைய படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்தது.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி தனுஷ் பிறந்த நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய போஸ்டருடன் படத்தின் டீசர் ஜூலை 28 இல் நள்ளிரவு 12.01 மணியளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த போஸ்டரில் தனுஷ் கையில் துப்பாக்கியுடன் புல்லட் தெறிக்க ஆக்ரோஷமாக கத்துவது போன்று அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.