spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'கேப்டன் மில்லர்' ஒரு மாஸான, ஹாலிவுட் லெவல் இந்தியப்படம்.... ஜான் கொக்கேன் கொடுத்த அப்டேட்!

‘கேப்டன் மில்லர்’ ஒரு மாஸான, ஹாலிவுட் லெவல் இந்தியப்படம்…. ஜான் கொக்கேன் கொடுத்த அப்டேட்!

-

- Advertisement -

கேப்டன் மில்லர் திரைப்படம் குறித்து ஜான் கொக்கேன் சில அப்டேட்டுகளை
கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் அடுத்து வரும் படங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாக உள்ள திரைப்படம் தான் கேப்டன் மில்லர். தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு பான் இந்தியா படமாக இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், சிவராஜ் குமார், ஜான் கொக்கேன், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். போர்க்களம் தொடர்பான ஒரு ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. போஸ்டர் வெளியான நாளில் இருந்து தனுஷின் நடிப்பு மற்றும் ஆக்சன் அவதாரத்தை காண ரசிகர்கள் தவமிருந்து வருகிறார்கள். இப்படம் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

we-r-hiring

இவ்வாறாக படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி வரும் நிலையில் படத்தில் நடித்துள்ள நடிகர் ஜான் கொக்கன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில்” கேப்டன் மில்லர் ஒரு தமிழ் படம் மட்டுமல்ல இது மிகப்பெரிய இந்திய திரைப்படமாகும். மேலும் இப்படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையான தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் மாறப் போகின்றது. தனுஷின் நடிப்பு வேற லெவலில் இருக்கும். நிச்சயமாக இத்திரைப்படம் ஒரு பெரிய மாஸான படமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.வரும் ஜூலை 28ஆம் தேதி கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வெளியாக உள்ளது. இந்நிலையில் ஜான் கொக்கேன் கொடுத்திருக்கும் அப்டேட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை டாப் கியரில் ஏற்றியுள்ளது. ஜான்கொக்கேன், கே ஜி எஃப், சார்பட்டா பரம்பரை, துணிவு உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ