spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரஜினி அனுப்பிய வாய்ஸ் மெசேஜை கேட்டு பூரித்துப்போன ராகவா லாரன்ஸ்!

ரஜினி அனுப்பிய வாய்ஸ் மெசேஜை கேட்டு பூரித்துப்போன ராகவா லாரன்ஸ்!

-

- Advertisement -

ராகவா லாரன்ஸ், ரஜினி குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.ரஜினி அனுப்பிய வாய்ஸ் மெசேஜை கேட்டு பூரித்துப்போன ராகவா லாரன்ஸ்!

தமிழ் சினிமாவில் ராகவா லாரன்ஸ் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், நடன இயக்குனராகவும் வலம் வருகிறார். இவர் திரைத்துறையில் பணியாற்றுவது தவிர ஏழை எளியோருக்கு பல்வேறு நலத்திட்டங்களையும் செய்து வருகிறார். சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வலம் வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் தற்போது ‘காஞ்சனா 4’ திரைப்படத்தை தானே தயாரித்து, இயக்கி, நடித்து வருகிறார். இது தவிர ‘பென்ஸ்’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (அக்டோபர் 29) ராகவா லாரன்ஸ் தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், ராகவா லாரன்ஸை வாழ்த்தியுள்ளார். இது தொடர்பாக ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

we-r-hiring

அந்த பதிவில், “ஹேப்பி பர்த்டே மாஸ்டர், காட் பிளஸ் யூ..லவ் யூ.. ” என்று ரஜினி தனக்கு வாழ்த்து கூறிய வாய்ஸ் மெசேஜை இணைத்து, “தலைவர் இன்று அதிகாலையில் எனக்கு ஒரு இனிமையான வாழ்த்து செய்தியை அனுப்பி என் பிறந்தநாளை இன்னும் ஸ்பெஷலானதாக மாற்றிவிட்டார் என்பதை பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது குரலைக் கேட்டது உண்மையிலேயே என் நாளை மகிழ்ச்சியடைய செய்தது. அவரது அன்புக்கும் ஆசிர்வாதங்களுக்கும் நான் என்றென்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ரஜினியின் தீவிர ரசிகனான ராகவா லாரன்ஸ் தன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளன்றும் ரஜினியை நேரில் சந்தித்து ஆசி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ