spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநெட்ஃப்ளிக்ஸின் ரூ. 60 கோடியை மறுத்த நட்சத்திர ஜோடி!! குவியும் பாராட்டுகள்…

நெட்ஃப்ளிக்ஸின் ரூ. 60 கோடியை மறுத்த நட்சத்திர ஜோடி!! குவியும் பாராட்டுகள்…

-

- Advertisement -

ஐதராபாத்: தெலுங்கு திரையுலகின் நட்சத்திர ஜோடியான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா தங்களது திருமண வீடியோவை விற்க மறுத்துவிட்டனர்.நெட்ஃப்ளிக்ஸின் ரூ. 60 கோடியை மறுத்த நட்சத்திர ஜோடி!! குவியும் பாராட்டுகள்…
தெலுங்கு திரையுலகில் பிரபலமானவா்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவா்கள் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனா். ‘கீத கோவிந்தம்’ படத்தில் இணைந்து நடித்ததிலிருந்தே இருவரும் ரகசியமாக காதல் செய்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், இதுவரை அந்த உறவை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இருவரும் வெளிப்படையாக எதையும் கூறாமல் அமைதியாக இருந்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொள்ளும் வகையில், மிக எளிமையாக இருவரும் நிச்சயம் செய்துக் கொண்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தை மாதத்தில் அல்லது பிப்ரவரி இறுதியில் திருமணம் பின்னா் இருவீட்டாாின் சம்மதத்துடன் தற்போது ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள பாரம்பரிய அரண்மனையில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவுக்கு திருமணம் கோலாகலமாக நடக்க உள்ளது.

we-r-hiring

இந்த திருமண நிகழ்விற்கு பிறகு, ஐதராபாத்தில் திரையுலக நண்பர்களுக்காக பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நட்சத்திர ஜோடியின் திருமணத்தை படம் பிடித்து ஒளிபரப்ப பிரபல ஓடிடி தளம் ஒன்று 60 கோடி ரூபாய் வழங்க முன்வந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகை நயன்தாரா உள்ளிட்ட சில பிரபலங்களின் திருமணங்கள் இதுபோன்று ஓடிடி தளங்களில் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், விஜய் தேவரகொண்டா இந்த பிரம்மாண்டமான தொகையை நிராகரித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘திருமண நினைவுகள் என்பது மிகவும் தனிப்பட்ட விஷயம் மற்றும் விலைமதிப்பற்றது’எனத் தெரிவித்து ‘எனது திருமண நிகழ்வை வணிக ரீதியாக பயன்படுத்த விரும்பவில்லை’என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம் கோடிக்கணக்கான பணத்தை விட தங்களது தனிப்பட்ட மகிழ்ச்சிக்கே இந்த ஜோடி முன்னுரிமை அளித்துள்ளது திரையுலகினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகாவின் காதல் உறுதி…. வைரலாகும் புகைப்படம்!

 

MUST READ