spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் காதல் உறுதி.... வைரலாகும் புகைப்படம்!

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகாவின் காதல் உறுதி…. வைரலாகும் புகைப்படம்!

-

- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் ஏராளமான பெண் ரசிகைகளை சேகரித்து வைத்திருப்பவர் விஜய் தேவரகொண்டா. அதே சமயம் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் ஏராளமான ஆண் ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார்.விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் காதல் உறுதி.... வைரலாகும் புகைப்படம்! இவர்கள் இருவரும் இணைந்து கீத கோவிந்தம் எனும் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர்கள். அதை தொடர்ந்து காம்ரேட் எனும் படத்திலும் இணைந்து நடித்திருந்தனர். அந்த சமயத்தில் இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து இருவரும் ஐந்து வருடங்களாக காதலித்து வருவதாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்த நிலையில் இருவருமே தங்களின் காதல் குறித்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் இருவரும் ஒன்றாக டேட்டிங் சென்ற புகைப்படங்கள் வீடியோக்கள் என அனைத்தும் இவர்கள் இருவரும் காதலித்து வருவதை உறுதி செய்தாலும் இவர்கள் பொது இடங்களில் தங்களின் காதலை அறிவிக்காத நிலையில் ரசிகர்கள் மத்தியில் குழப்பங்களும் இருந்து வந்தன. இந்நிலையில்தான் சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவிடம் பத்திரிகையாளர்கள் நீங்கள் சிங்கிளா? என்று கேள்வி எழுப்பிய போது “தற்போது எனக்கு 35 வயது. இன்னமும் நான் யாருடனாவது டேட்டிங் செய்யாமல் இருப்பேன் என்று நினைக்கிறீர்களா?” என்று சொன்னார். இதன் மூலம் விஜய் தேவரகொண்டா தன்னுடைய காதலை உறுதி செய்ததாக பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம், புஷ்பா 2 படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் ராஷ்மிகாவிடம், உங்கள் வருங்கால கணவர் சினிமாவை சேர்ந்தவரா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராஷ்மிகா, “என்னுடைய காதல் பற்றி அனைவருக்குமே தெரியும்”என்று பதிலளித்தார். இதன் மூலம் ராஷ்மிகாவும் தனது காதலை உறுதி செய்ததாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர்.விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் காதல் உறுதி.... வைரலாகும் புகைப்படம்!

எனவே விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா ஆகிய இருவருமே தங்களின் காதலை வெளிப்படையாக கூறிவந்த நிலையில் இருவரும் ஒன்றாக அமர்ந்து ஹோட்டலில் உணவு அருந்தும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது விஜய் தேவர கொண்டா – ராஷ்மிகா இருவருமே தங்களின் உறுதி செய்ததோடு வெளிப்படையாகவே தற்போது டேட்டிங் செய்து வருவதால் விரைவில் இவர்களின் திருமண அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ