spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'லோகா சாப்டர் 2' அதிகாரப்பூர்வ அறிவிப்பு.... வைரலாகும் ப்ரோமோ!

‘லோகா சாப்டர் 2’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு…. வைரலாகும் ப்ரோமோ!

-

- Advertisement -

லோகா சாப்டர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.'லோகா சாப்டர் 2' அதிகாரப்பூர்வ அறிவிப்பு.... வைரலாகும் ப்ரோமோ!கடந்த ஆகஸ்ட் மாதம் துல்கர் சல்மானின் வேப்பரர் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் லோகா சாப்டர் 1: சந்திரா எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லேன், சாண்டி மாஸ்டர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். டோமினிக் அருண் இந்த படத்தை இயக்கியிருந்தார். சூப்பர் ஹீரோ சப்ஜெக்டில் வெளியான இந்த படம் இந்திய அளவில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது. அதேசமயம் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியான இந்த படம் உலக அளவில் ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. இது தவிர இன்னும் சில நாட்களில் இப்படம் ஓடிடியில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் ‘லோகா’ திரைப்படத்தை 5 பாகங்களாக எடுக்க திட்டமிட்டு வருவதாக துல்கர் சல்மான் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

we-r-hiring

அதன்படி இதன் இரண்டாம் பாகத்தில் டோவினோ தாமஸ் நடிக்கவுள்ளார் என ஏற்கனவே தகவல் கசிந்தது. இந்நிலையில் லோகா சாப்டர் 2 படத்தின் அறிவிப்பு ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. கலகலப்பான இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த ப்ரோமோவை பார்க்கும் போது டோவினோ தாமஸுடன் இணைந்து இப்படத்தின் தயாரிப்பாளர் துல்கர் சல்மானும் இதில் தோன்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ