spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணையும் புதிய படம்… புரோமோ வெளியீடு.. உற்சாகத்தில் ரசிகர்கள்

ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணையும் புதிய படம்… புரோமோ வெளியீடு.. உற்சாகத்தில் ரசிகர்கள்

-

- Advertisement -

ரெட் ஜெய்ண்ட் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்க  உள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணையும் புதிய படம்… புரமோ வெளியீடு.. உற்சாகத்தில் ரசிகர்கள்ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து ரெட் ஜெய்ண்ட் தயாாிக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 1981ஆம் ஆண்டு வெளியான தில்லு முல்லு திரைப்படத்திற்கு பிறகு, சுமார் 46 ஆண்டுகள் கழித்து இரு முன்னணி நடிகர்களும் மீண்டும் ஒரே படத்தில் திரைபங்கிடுவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

முதல் போஸ்டரிலேயே, பழமையான கார் மெக்கானிக் ஷெட்டில் 1960களை நினைவூட்டும் வகையில் ஒரு பழைய மாடல் கார் இடம்பெற்றுள்ளது. இதனால், இத்திரைப்படம் அந்த காலக்கட்டத்தை மையமாகக் கொண்டதாக இருக்கலாம் என்ற எதிா்பாா்ப்பு மேலும் அதிகரிக்கிறது.

we-r-hiring

இப்படத்தை நெல்சன் திலீப்குமார் எழுதி இயக்குகிறார். முன்னதாக ரஜினிகாந்துடன் ‘ஜெயிலர்’ படத்தில் இணைந்த அவர், தற்போது உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்திற்குப் பிறகு மீண்டும் ரஜினியுடன் இணைகிறார். கமல்ஹாசனுடன் அவரது முதல் கூட்டணி இதுவே. இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். நெல்சன்–அனிருத் கூட்டணியில் உருவாகும் ஆறாவது படம் இதுவாகும்.

இதற்கிடையில், படத்தின் முதல் புரோமோவும் வெளியிடப்பட்டுள்ளது. கருமையான பின்னணி, பழைய காலத் தோற்றம் மற்றும் மர்மம் கலந்த காட்சிகள் மூலம் புரோமோ ஒரு ரெட்ரோ–ஆக்ஷன் உணர்வை ஏற்படுத்துகிறது. ரஜினி–கமல் ஒரே ஃப்ரேமில் தோன்றும் தருணம் ரசிகர்களுக்கு வித்தியாசமான உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1960களின் சூழலை உணர்த்தும் செட் வடிவமைப்பு மற்றும் அனிருத் பின்னணி இசை, படத்திற்கு மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ரஜனி மற்றும் கமல் மீண்டும் இணைவது தமிழ் திரையுலகில் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

‘கெணத்த காணோம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

 

MUST READ