ராஜமௌலியின் ’வாரணாசி’ பட ரிலீஸ் குறித்த புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.
பிரம்மாண்ட இயக்குநர் என்று அழைக்கப்படும் ராஜமௌலி, ‘பாகுபலி’ படத்தின் மூலம் இந்திய சினிமா ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தார். அடுத்து ‘பாகுபலி 2’ திரைப்படத்தையும் இயக்கி அதிக வசூலை அள்ளினார். அதற்குப் பிறகு ‘ஆர்ஆர்ஆர்’ (RRR) படத்தையும் இயக்கியிருந்தார். இந்தப் படமும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. எனவே இவர் அடுத்ததாக இயக்கி வரும் ‘வாரணாசி’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கிறது. இந்தப் படத்தில் மகேஷ் பாபு, பிரித்விராஜ் சுகுமாரன், பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிக்கின்றனர். இது மகேஷ் பாபுவின் 29-வது படமாக உருவாகி வருகிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ நிறைவடைந்து, தற்போது வி.எஃப்.எக்ஸ் பணிகள் போன்ற பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், இந்தப் படம் 2027 ஏப்ரல் 7-ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சமீபகாலமாக இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போவதாகப் பல தகவல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. இந்நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி, நிலுவையில் உள்ள வி.எஃப்.எக்ஸ் பணிகள் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் சுமார் நான்கு மாதங்கள் தள்ளிப்போய் 2027 ஆகஸ்ட் மாதத்திற்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக சினிமா மாவட்டங்களில் பேசப்படுகிறது.
மேலும், மகேஷ் பாபுவின் அறிமுகக் காட்சி இன்னும் படமாக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இது குறித்து இயக்குநர் ராஜமௌலி தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படாமல் அமைதி காத்து வருவது ரசிகர்களிடையே குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது.
