Homeசெய்திகள்சினிமா'மூக்குத்தி அம்மன்' படத்திற்காக அணுகப்பட்ட நடிகைகள் யார் யார்?.... ஆர்.ஜே. பாலாஜி பகிர்ந்த தகவல்!

‘மூக்குத்தி அம்மன்’ படத்திற்காக அணுகப்பட்ட நடிகைகள் யார் யார்?…. ஆர்.ஜே. பாலாஜி பகிர்ந்த தகவல்!

-

- Advertisement -

கடந்த 2020-ஆம் ஆண்டு ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் வெளியானது. 'மூக்குத்தி அம்மன்' படத்திற்காக அணுகப்பட்ட நடிகைகள் யார் யார்?.... ஆர்.ஜே. பாலாஜி பகிர்ந்த தகவல்!இந்த படத்தில் நயன்தாரா அம்மனாக நடித்திருந்தார். கடவுளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் நயன்தாரா, அம்மன் வேடத்தில் நடித்திருந்த நிலையில், ஆர்.ஜே. பாலாஜியும் முக்கியப் பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி பெற்றது. ​அதனைத் தொடர்ந்து, சூர்யா கதாநாயகனாக நடித்த ‘கருப்பு’ திரைப்படத்தையும் ஆர்.ஜே. பாலாஜி இயக்கினார். அப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. இதையடுத்து, மீண்டும் சூர்யாவுடன் கூட்டணி அமைத்து ‘கருப்பு 2’ படத்தை இயக்க உள்ளார் ஆர்.ஜே. பாலாஜி.
​இதற்கிடையில், ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தையும் ஆர்.ஜே. பாலாஜியே இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அந்தப் பொறுப்பு இயக்குநர் சுந்தர்.சி வசம் சென்றது. சுந்தர்.சி இப்படத்தைப் பிரம்மாண்டமாக உருவாக்கியிருந்தார். இருப்பினும் சமீபத்தில் திரைக்கு வந்த ‘மூக்குத்தி அம்மன் 2’ ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.'மூக்குத்தி அம்மன்' படத்திற்காக அணுகப்பட்ட நடிகைகள் யார் யார்?.... ஆர்.ஜே. பாலாஜி பகிர்ந்த தகவல்!​இந்நிலையில், ‘மூக்குத்தி அம்மன்’ முதல் பாகத்தில் நடிக்க, தான் முதலில் யாரையெல்லாம் அணுகினேன் என்பது குறித்து ஆர்.ஜே. பாலாஜி மனம் திறந்துள்ளார். அதன்படி, இப்படத்திற்காக முதலில் நடிகை நித்யா மேனனைத் தொடர்பு கொள்ள முயன்றதாகவும், ஆனால் அவரை அணுக முடியாமல் போனதால், அடுத்ததாக ஸ்ருதி ஹாசனிடம் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், வருங்காலத்தில் நித்யா மேனன், ஸ்ருதி ஹாசன் போன்ற திறமையான நடிகைகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என தான் விரும்புவதாகவும் ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.

MUST READ