Homeசெய்திகள்சினிமா'கைதி' பட வாய்ப்பை இழந்தது குறித்து விஜய் சேதுபதி ஓபன் டாக்!

‘கைதி’ பட வாய்ப்பை இழந்தது குறித்து விஜய் சேதுபதி ஓபன் டாக்!

-

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி ‘கைதி’ பட வாய்ப்பை இழந்தது குறித்து பேசி உள்ளார்.'கைதி' பட வாய்ப்பை இழந்தது குறித்து விஜய் சேதுபதி ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒன்றாக வலம் வரும் விஜய் சேதுபதி, வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான பத்தா திரைப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த நிலையில், அடுத்தது வருகின்ற டிசம்பர் 4-ஆம் தேதி ‘ட்ரெயின்’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதற்கான புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ​அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் சேதுபதியிடம், நீங்கள் மிஸ் செய்த மற்றும் பின்னர் வருத்தப்பட்ட கதாபாத்திரம் எது என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த விஜய் சேதுபதி, “‘கைதி’ படத்தில் நான்தான் நடிப்பதாக இருந்தது. கார்த்தி சார் அந்தப் படத்தில் நடிக்க வந்ததும், என்னை அழைத்துத் தகவல் தெரிவித்தார். நானும் வாழ்த்துத் தெரிவித்தேன். லோகேஷ் கனகராஜ் எனக்கு சகோதரர் போன்றவர் என்பதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. கதை கேட்டவுடனேயே அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று எனக்குத் தெரியும். மிஸ் ஆன ஒரே படம் அதுதான்” எனக் கூறியுள்ளார்.
​லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கைதி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. சாம் சி.எஸ்-ன் இசை இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்தது. எனவே, அடுத்ததாக ‘கைதி 2’ திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

MUST READ