Homeசெய்திகள்சினிமாதமிழக பாக்ஸ் ஆபிஸில் தடுமாறும் தனுஷ்.... மெகா ஹிட்டுக்காகக் காத்திருக்கும் ரசிகர்கள்!

தமிழக பாக்ஸ் ஆபிஸில் தடுமாறும் தனுஷ்…. மெகா ஹிட்டுக்காகக் காத்திருக்கும் ரசிகர்கள்!

-

- Advertisement -

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதே சமயம் அடுத்தடுத்த படங்களில் பிஸியாகவே நடித்து வருகிறார். குறுகிய காலத்தில் அதிகப் படங்களில் நடிக்கிறார். தமிழக பாக்ஸ் ஆபிஸில் தடுமாறும் தனுஷ்.... மெகா ஹிட்டுக்காகக் காத்திருக்கும் ரசிகர்கள்!சொல்லப்போனால் ஒரே ஆண்டில் இரண்டு முதல் மூன்று படங்கள் தனுஷின் நடிப்பில் ரிலீஸாகிவிடுகின்றன. ஆனால் தமிழில் அவருக்குக் கடந்த சில வருடங்களில் பெரிய அளவில் ஹிட் கொடுக்கும்படியான எந்தப் படமும் அமையவில்லை. அதே சமயம், கடந்த சில ஆண்டுகளாகத் தனுஷின் நேரடித் தமிழ் திரைப்படங்களை ஒப்பிடும்போது, அவருடைய பிற மொழித் திரைப்படங்களான ‘குபேரா’ மற்றும் ‘தேரே இஷ்க் மெய்ன்’ ஆகியவை பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமான படங்களாக உருவெடுத்துள்ளன. இருப்பினும், இந்தப் படங்களால் கூட தனுஷின் சொந்த மார்க்கெட்டான தமிழ்நாட்டில் பிரேக்-ஈவன் இலக்கை எட்ட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், தமிழக பாக்ஸ் ஆபிஸில் இந்தப் படங்கள் ஏமாற்றமளிக்கும் வசூலையே பதிவு செய்துள்ளன. இதன் மூலம், தனது சொந்த மார்க்கெட்டான தமிழ்நாட்டில் தனுஷ் படிப்படியாகத் தனது பிடியை இழந்து வருவதாகவும், இழந்த இடத்தை மீண்டும் பிடிக்க அவருக்கு ஒரு வலுவான கமர்ஷியல் வெற்றிப் படம் கட்டாயம் தேவைப்படுவதாகவும் பேசப்படுகிறது. ஆகையினால் அடுத்ததாக தனுஷின் D56 படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படம் ஒரு கிராமப்புற கமர்சியல் என்டர்டெய்னர் படமாக உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ