Homeசெய்திகள்சினிமா'இந்தியன் 3' ரிலீஸ் பிளான்.... கமல்ஹாசனை சந்திக்கும் தயாரிப்பாளர்!

‘இந்தியன் 3’ ரிலீஸ் பிளான்…. கமல்ஹாசனை சந்திக்கும் தயாரிப்பாளர்!

-

- Advertisement -

இந்தியன் 3 படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.

கடந்த 1996-ஆம் ஆண்டு கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் ஊழலுக்கு எதிரான கதைக்களத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 'இந்தியன் 3' ரிலீஸ் பிளான்.... கமல்ஹாசனை சந்திக்கும் தயாரிப்பாளர்!அதன் பிறகு ‘இந்தியன் 2′ திரைப்படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கியிருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், பலரும் இந்தப் படத்தை ட்ரோல் செய்து வந்தனர். இதற்கிடையில் இந்தியன் 2 படம் படமாக்கப்படும்போதே இந்தியன் 3 திரைப்படத்திற்கான காட்சிகள் பெரும்பாலும் தயாராகிவிட்டதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில்’இந்தியன் 3′ படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகியுள்ளன.
​’இந்தியன் 3’ படத்தின் ஒரு வெர்ஷனுக்கான டப்பிங்கை கமல்ஹாசன் ஏற்கெனவே முடித்துவிட்டாராம். இருப்பினும், படக்குழுவினர் தற்போது சில புதிய விஷயங்களைச் சேர்த்து வருவதால், அதற்காக அவர் மீண்டும் டப்பிங் பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 'இந்தியன் 3' ரிலீஸ் பிளான்.... கமல்ஹாசனை சந்திக்கும் தயாரிப்பாளர்!மேலும், படத்தின் ரிலீஸுக்கான தனது ஒப்புதலையும் அனுமதியையும் அவர் வழங்க வேண்டியுள்ளது. இதனால், படத்தின் வெளியீட்டுத் திட்டங்கள் குறித்துப் பேச லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஸ்கரன் விரைவில் கமல்ஹாசனை சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், இந்த படம் 2027 ஆம் ஆண்டில் திரைக்கு வரும் என தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

MUST READ