Homeசெய்திகள்சினிமா​மாரி செல்வராஜின் 'மஞ்சணத்தி' படப்பிடிப்பில் திடீர் மாற்றம்.... அடுத்த பிளான் என்ன?

​மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பில் திடீர் மாற்றம்…. அடுத்த பிளான் என்ன?

-

- Advertisement -

மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.​மாரி செல்வராஜின் 'மஞ்சணத்தி' படப்பிடிப்பில் திடீர் மாற்றம்.... அடுத்த பிளான் என்ன?தமிழ் சினிமாவில் ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மாரி செல்வராஜ், ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன்’ என அடுத்தடுத்த வெற்றிப் படங்களைக் கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார். அதுமட்டுமில்லாமல், இவருடைய ஒவ்வொரு படங்களிலும் இருக்கும் வலுவான திரைக்கதை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே இவருடைய அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அந்த வகையில் இவர் தற்போது ‘மஞ்சணத்தி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கதிர், கயடு லோகர், பிரியங்கா மோகன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படமானது பெண்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படுவது போலத் தெரிகிறது. அடுத்தது இந்தப் படத்திற்கு, இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். ஏற்கனவே இந்தப் படத்தின் பூஜை சிறப்பாக நடந்து முடிந்து, படப்பிடிப்பும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.​மாரி செல்வராஜின் 'மஞ்சணத்தி' படப்பிடிப்பில் திடீர் மாற்றம்.... அடுத்த பிளான் என்ன?​இந்நிலையில், ‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பு குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் 55 நாட்கள் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இருப்பினும், படத்தின் கதாநாயகிகளான கயடு லோகர் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோரின் கால்ஷீட் ஒத்துப்போகாத காரணத்தால், அடுத்த கட்டப் படப்பிடிப்பு டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், இந்தப் படப்பிடிப்பு இடைவெளியைப் பயன்படுத்தி, ஏற்கனவே படமாக்கப்பட்ட காட்சிகளின் எடிட்டிங் பணிகளை இயக்குநர் மாரி செல்வராஜ் தொடங்கியுள்ளாராம். இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் வெளிவரும் என நம்பப்படுகிறது.

 

MUST READ