அருள்நிதி நடிக்கும் வேட்ட சாமி படத்தின் டீஸர் ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அருள்நிதி. வித்தியாசமான கதைக்களங்களையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடிய இவர், தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘டிமான்ட்டி காலனி 3’ படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரத் தயாராகி வருகிறது. இதற்கிடையில், அருள்நிதி ‘பம்பர்’ பட இயக்குநர் செல்வக்குமார் இயக்கத்தில் ‘வேட்ட சாமி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அருள்நிதியுடன் இணைந்து அமீர், ஆடுகளம் நரேன், மைனா நந்தினி, இந்துமதி மணிகண்டன், விஜி சந்திரசேகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘செவன் மைல்ஸ் பெர் செகண்ட் ப்ரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படமானது கிராமப்புற பின்னணியில் காவல் தெய்வ வழிபாடுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
Arulnithi’s #VettaSaami — Teaser from Today 5.50PM 💥 https://t.co/dvqH71NOh2
— Movie Tamil (@_MovieTamil) November 24, 2026
ஏற்கனவே இந்தப் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், பாடல்களும், முன்னோட்ட வீடியோவும் வெளியான நிலையில், படத்தின் டீசர் குறித்த அறிவிப்பை படக்குழு சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதன்படி, இன்று (நவம்பர் 24) மாலை 5.50 மணிக்கு ‘வேட்ட சாமி’ படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படம் 2026 டிசம்பர் மாதம் வெளியாகும் என ஏற்கனவே தகவல் பரவி வந்த நிலையில், இந்த டீசரில் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
