கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் மணிரத்தினம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ பாகம் 1 மற்றும் பாகம் 2 ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியானது. பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாகத் திரிஷாவும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும் நடித்திருந்தனர். இன்னும் பல நட்சத்திரப் பட்டாளங்களும் படத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார். கல்கியின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுக்களை வென்றது. படத்தின் இசை, மேக்கிங் போன்றவை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்தன. அதுமட்டுமில்லாமல், படத்தில் நடித்த பலருக்கும் பாராட்டுகளும் குவிந்தன. மேலும், 70-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ் படம் உட்பட நான்கு படம் தேசிய விருதுகளையும் அள்ளியது.
மணிரத்னத்தின் தனித்துவமான படைப்புகளில் பெரிய அளவில் பேசப்படும் இந்த படம் கிட்டத்தட்ட ரூ. 450 முதல் ரூ. 480 கோடிக்கும் அதிகமான வசூலை வாரிக் குவித்தது. இந்நிலையில், இந்தப் படத்தில் வந்தியத்தேவன் கேரக்டரை மணிரத்னம், நடிகர் அஜித்குமாருக்காக எழுதினார் என்று பிரபல தயாரிப்பாளர் ராம்வாசு கூறியிருக்கிறார். இந்தத் தகவல் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அஜித் வந்தியத்தேவனாக நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பும், இதை மிஸ் பண்ணிட்டோமே என்ற எண்ணமும் ரசிகர்கள் மத்தியில் இப்போது எழுந்துள்ளது.
மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ …. அந்த கேரக்டர் அஜித்துக்காக எழுதப்பட்டதா?…. வெளியான தகவல்!
-
- Advertisement -
