சூப்பர் ஸ்டார் பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் ட்ரீட் தயாராகி வருவதாக தகவல் கசிந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே சமயம், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘தர்மன்’ படத்தில் தற்போது ரஜினி நடித்து வருகிறார். ஏற்கனவே ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ ஆகிய படங்களை இயக்கிப் பிரம்மாண்ட வெற்றி பெற்றவர் அஸ்வத் மாரிமுத்து. எனவே, அஸ்வத் மாரிமுத்துவும், ரஜினியும் கூட்டணி அமைத்திருப்பது ஆரம்பத்திலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணம். இந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் நயன்தாரா, சிம்ரன், ராஷி கண்ணா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்க, ராம் பொத்தினேனி வில்லனாக நடிக்கிறார். இவ்வாறு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், அடுத்த மாதம் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்யப் படக்குழு திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. மேலும், அடுத்த மாதம் 12 ஆம் தேதி சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு சிறப்பு கிளிம்ப்ஸ் வீடியோ தயாராகி வருவதாகவும், அந்த வீடியோ சுமார் 45 முதல் 58 வினாடிகள் ரன்னிங் டைம் கொண்டதாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கிட்டத்தட்ட தயாராகி இருக்கும் அந்த வீடியோவில் இசைப் பணிகள் மட்டுமே பாக்கியுள்ளதாகவும், அனிருத் இணைந்தவுடன் அந்தப் பணிகள் நிறைவடையும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், ‘தர்மன்’ திரைப்படத்தை ஏப்ரல் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அறிவிப்பும் ரஜினி பிறந்தநாளுக்கு வெளியாகும் அந்த கிளிம்ஸ் வீடியோவில் அறிவிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
