Homeசெய்திகள்சினிமா'பார்ட் 2' படங்களில் பொய் இருக்கிறது.... இயக்குனர் மிஷ்கின் ஓபன் டாக்!

‘பார்ட் 2’ படங்களில் பொய் இருக்கிறது…. இயக்குனர் மிஷ்கின் ஓபன் டாக்!

-

- Advertisement -

இயக்குனர் மிஷ்கின் ‘பார்ட் 2’ படங்கள் குறித்து பேசி உள்ளார்.'பார்ட் 2' படங்களில் பொய் இருக்கிறது.... இயக்குனர் மிஷ்கின் ஓபன் டாக்!

​தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி பாணியில் படங்களை இயக்கி வருபவர் இயக்குநர் மிஷ்கின். சமீபத்தில் இவர், கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சத்தியவான் சாவித்திரி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது. இப்படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மிஷ்கின், தனது அடுத்தடுத்த படங்கள் மற்றும் பார்ட் 2 திரைப்படங்கள் குறித்து சில வெளிப்படையான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதன்படி அவர், ‘துப்பறிவாளன்’ படத்தின் 2, 3, 4 மற்றும் 5-ஆம் பாகங்களுக்கான கதைக்கரு தன்னிடம் இருந்தபோதிலும், நடிகர் விஷாலுக்கும் தனக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அந்தப் படத்தைக் கைவிட்டுவிட்டதாகவும், இனி அதைச் செய்யப் போவதில்லை என்றும் மிஷ்கின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அதேபோல் ‘ட்ரெயின்’ படத்தின் கதாபாத்திரத்தை வைத்து ‘ட்ரெயின் 2’ எடுக்க முடியும் என்றாலும், அதை எப்படி அணுகுவது என்று தனக்கு இன்னும் தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
​மேலும் ‘அஞ்சாதே 2’ குறித்துப் பேசிய மிஷ்கின், “இளமைப் பருவத்தில் எடுக்கப்பட்ட ‘அஞ்சாதே’ ஒரு வித்தியாசமான படம். 2026-ஆம் ஆண்டில் இருக்கும் Gen Z தலைமுறையினர் அந்த வாழ்க்கையோடு எந்த அளவிற்குத் தங்களைத் தொடர்புபடுத்திக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. ‘அஞ்சாதே’ நன்றாக ஓடியது என்பதற்காக ‘அஞ்சாதே 2’ எடுத்தால் ஓடிவிடுமா? இன்றைய காலகட்டத்தில் பல பார்ட் 2 படங்களைப் பார்க்கிறேன். அவற்றில் ஒரு சிறிய பொய் இருக்கிறது. முந்தைய பாகத்தின் வெற்றியை கொண்டே இரண்டாம் பாகத்தை ஓட்ட முயற்சிக்கிறார்கள். நான் அதில் சிக்க விரும்பவில்லை” எனக் கூறியுள்ளார். 'பார்ட் 2' படங்களில் பொய் இருக்கிறது.... இயக்குனர் மிஷ்கின் ஓபன் டாக்!அடுத்தது ​நடிகர் நரேனுடன் இணைந்து பணியாற்றுவது குறித்துப் பகிர்ந்த அவர், “நான் நேர்மையான ஒரு படத்தைச் செய்ய விரும்புகிறேன். கதையை எழுதி முடித்த பிறகு, இது உண்மையிலேயே ‘அஞ்சாதே’ படத்தின் அடுத்த பாகம்தான் என எனக்குத் தோன்றினால் அதற்கு ‘அஞ்சாதே 2’ எனப் பெயரிடுவேன். இல்லையென்றால் வேறு விதமாகப் பண்ணுவேன். நரேனிடமும் ‘அஞ்சாதே 2’ பண்ணச் சொல்லி என்னைக் கட்டாயப்படுத்தாதே என்று சொல்லிவிட்டேன். பழைய பெயரால் கூட்டம் வரும் என அவர் நினைக்கலாம். ஆனால் அப்படி வர வேண்டியதில்லை. படம் நன்றாக இருந்தால் மக்கள் நிச்சயம் வருவார்கள். சமீபத்தில் மூன்று படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் நல்ல படங்கள் மட்டுமே ஓடுகின்றன. நல்ல படம் ஓடட்டும், அதற்காகத் தலைப்பு உதவ வேண்டிய அவசியமில்லை” என மிஷ்கின் பேசியுள்ளார். இவருடைய இந்த பேச்சு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

MUST READ