Homeசெய்திகள்சினிமாதளபதி விஜயின் மகனை ஹீரோவாக்கும் லிங்குசாமி.... 'பையா 2' பட ஹீரோ யார்?

தளபதி விஜயின் மகனை ஹீரோவாக்கும் லிங்குசாமி…. ‘பையா 2’ பட ஹீரோ யார்?

-

- Advertisement -

இயக்குனர் லிங்குசாமி, தளபதி விஜயின் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.தளபதி விஜயின் மகனை ஹீரோவாக்கும் லிங்குசாமி.... 'பையா 2' பட ஹீரோ யார்?

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் இயக்குநர் லிங்குசாமி. கடைசியாக ‘தி வாரியர்’ படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. இதற்கு முன்னதாக லிங்குசாமியின் இயக்கத்தில் வெளியான அஞ்சான், சண்டக்கோழி 2 திரைப்படமும் கலவையான விமர்சனங்களை பெற்றது. எனவே அடுத்தது எப்படியாவது சிறந்த கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் லிங்குசாமி. எனவே அடுத்தபடியாக புதிய முகங்களை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார் என ஏற்கனவே தகவல் கசிந்தது. அதன்படி தற்போது இது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் லிங்குசாமி, இதற்காகப் புதிய கதாநாயகன் மற்றும் கதாநாயகியைத் தேர்வு செய்யும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். தளபதி விஜயின் மகனை ஹீரோவாக்கும் லிங்குசாமி.... 'பையா 2' பட ஹீரோ யார்?இந்நிலையில், தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்யை கதாநாயகனாக அறிமுகப்படுத்த இயக்குநர் லிங்குசாமி, ஜேசன் சஞ்சையை அணுகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் லிங்குசாமியின் சூப்பர் ஹிட் படமான ‘ரன்’ பட பாணியில் ஒரு கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அதே சமயம், லிங்குசாமியின் லைன்-அப்பில் ‘பையா 2’ திரைப்படமும் இருப்பதாக ஏற்கனவே பேச்சு அடிபட்டு வந்தது. முதலில் கார்த்தியை வைத்துத் திட்டமிடப்பட்டிருந்த இப்படத்தை, தற்போது வேறு ஒரு ஹீரோவை வைத்து உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். இப்படம் ‘பையா’ பிரான்சைஸின் தொடர்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ