தனுஷின் ஓ.ம் திரைப்படம் விரைவில் 100 கோடி கிளப்பில் இணைய இருக்கிறது.
நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த நவம்பர் 20-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘ஓ.ம்’. ‘அமரன்’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தில் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நஸ்ருதீன் ஷா, இந்திரன்ஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்தப் படம்
வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், ‘ இத்திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் அதிக வசூலை அள்ளி வருகிறது. குறிப்பாக, இப்படத்தில் தனுஷ் மற்றும் சாய் பல்லவியின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அதே சமயம், சாய் அபயங்கரின் இசை படத்திற்குப் பெரிய பக்கபலமாக அமைந்துள்ளதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.
வசூல் ரீதியாகவும் இப்படம் அசத்தி வருகிறது. வெளியான முதல் நாளில் மட்டும் 40 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட 75 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது. தற்போது 3 நாட்களில் இப்படம் உலகம் முழுவதும் 90 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், இன்னும் ஓரிரு நாட்களில் ‘ஓ.ம்’ திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்து விரைவில் 100 கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
