Homeசெய்திகள்சினிமா8 ஆண்டுகளுக்கு பிறகும் குறையாத எதிர்பார்ப்பு.... 'அரசன்' படத்தில் 'வடசென்னை 2' லீட் குறித்து வெற்றிமாறன்!

8 ஆண்டுகளுக்கு பிறகும் குறையாத எதிர்பார்ப்பு…. ‘அரசன்’ படத்தில் ‘வடசென்னை 2’ லீட் குறித்து வெற்றிமாறன்!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநராக பல வெற்றிப் படங்களைக் கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் வெற்றிமாறன். அவர் இப்போது ‘ராஜன் வகையறா’ படத்தை இயக்கி வருகிறார். அதே வேளையில் சிம்பு நடிப்பில் ‘அரசன்’ படத்தையும் எடுத்து வருகிறார். 8 ஆண்டுகளுக்கு பிறகும் குறையாத எதிர்பார்ப்பு.... 'அரசன்' படத்தில் 'வடசென்னை 2' லீட் குறித்து வெற்றிமாறன்!இந்தப் படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ‘அரசன்’ படம் எப்போது ரிலீஸ் ஆகும்? என ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதுடன், திரையில் கொண்டாடவும் பயங்கரமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்தப் படத்தில் சிம்புவை வெற்றிமாறன் வேறொரு பரிமாணத்தில் காட்டியிருப்பார் என்று நம்பப்படுகிறது. மேலும், படத்தின் கதைக்களம் எப்படி இருக்கும் என்பதைக் காணவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், “நீங்கள் ஒரே நேரத்தில் ‘அரசன்’ மற்றும் ‘ராஜன் வகையறா’ ஆகிய படங்களைப் படமாக்கி வருகிறீர்கள். இந்தப் படங்கள் ‘வடசென்னை 2’-க்கு வழிவகுக்குமா?” என்று வெற்றிமாறனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 8 ஆண்டுகளுக்கு பிறகும் குறையாத எதிர்பார்ப்பு.... 'அரசன்' படத்தில் 'வடசென்னை 2' லீட் குறித்து வெற்றிமாறன்!அதற்கு அவர், “ஒரே படத்தின் வெவ்வேறு பகுதிகளைப் படமாக்குவது போலவே உணர்கிறோம். இரண்டு படங்களிலுமே பெரும்பாலான கதாபாத்திரங்களின் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் படங்கள் நேரடியாக ‘வடசென்னை 2’-க்கான லீட் ஆக இருக்காது. ஆனால், இந்தப் படங்கள் மூலமாக இரண்டாம் பாகத்திற்கான களத்தை நாங்கள் அமைத்து வருகிறோம். ‘வடசென்னை’ தான் என்னுடைய மிகப்பெரிய முதலீடு. 8 ஆண்டுகளுக்குப் பிறகும் மக்கள் அதைப் பற்றி இன்னும் அதிகமாகப் பார்க்க விரும்புகிறார்கள் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

 

MUST READ