Homeசெய்திகள்சினிமாபாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் தனுஷ்.... 3 நாட்களில் இத்தனை கோடி வசூலா? ... 'ஓ.ம்'...

பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் தனுஷ்…. 3 நாட்களில் இத்தனை கோடி வசூலா? … ‘ஓ.ம்’ படக்குழுவின் புதிய அறிவிப்பு!

-

- Advertisement -

தனுஷின் ஓ.ம் திரைப்படம் மூன்று நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் தனுஷ்.... 3 நாட்களில் இத்தனை கோடி வசூலா? ... 'ஓ.ம்' படக்குழுவின் புதிய அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வரும் தனுஷ், ஒரு படத்தில் நடித்து முடித்ததும் அடுத்த படப்பிடிப்பில் இணைந்துவிடும் அளவுக்குப் பயங்கர பிஸியாக நடித்து வருகிறார். தற்போது இவர் ‘லப்பர் பந்து’ பட இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தன்னுடைய 56-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், இவர் ‘அமரன்’ பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘ஓ.ம்’ (ஓ.ம் – ஆபரேஷன் மோல்) படத்தில் நடித்திருந்தார். தமிழ்நாடு – ஆந்திரா எல்லைப் பகுதியில் நடக்கும் செம்மர கடத்தலை பின்னணியாக கொண்டு ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் வெளியான இந்தப் படத்தில் தனுஷுடன் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நஸ்ருதீன் ஷா, இந்திரன்ஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் தனுஷ் மற்றும் சாய் பல்லவியின் நடிப்பு, சாய் அபயங்கரின் இசை ஆகியவை படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறது. ஆனாலும், இந்தப் படத்தில் வசனங்கள் அதிகமாக இருப்பதாலும், திரைக்கதை விறுவிறுப்பு கொஞ்சம் குறைவாக இருப்பதாலும் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் தனுஷ்.... 3 நாட்களில் இத்தனை கோடி வசூலா? ... 'ஓ.ம்' படக்குழுவின் புதிய அறிவிப்பு! இருந்தாலுமே, இந்தப் படம் வெளியான மூன்று நாட்களிலேயே உலகம் முழுவதும் 101.7 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மூன்று நாட்களிலேயே 100 கோடி கிளப்பில் இணைந்த ‘ஓ.ம்’ திரைப்படம் இனிவரும் நாட்களிலும் அதிக வசூலை வாரிக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ