Homeசெய்திகள்சினிமாதனுஷ் - எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் 'D56'.... மதுரையில் படப்பிடிப்பு தீவிரம்!

தனுஷ் – எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் ‘D56’…. மதுரையில் படப்பிடிப்பு தீவிரம்!

-

- Advertisement -

தனுஷ் – எஸ். ஜே. சூர்யா நடிக்கும் D56 படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தனுஷ் - எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் 'D56'.... மதுரையில் படப்பிடிப்பு தீவிரம்!

நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் ‘ஓம்’ திரைப்படம் வெளியாகித் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. இதற்கிடையில், ‘லப்பர் பந்து’ படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படமானது தனுஷின் 56வது படமாக உருவாகி வருகிறது. எனவே இதற்கு தற்காலிகமாக D56 எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, உறியடி விஜயகுமார், பிரீத்தி முகுந்தன், வடிவேலு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.தனுஷ் - எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் 'D56'.... மதுரையில் படப்பிடிப்பு தீவிரம்!இப்படத்தில் தனுஷ் பூசாரி கதாபாத்திரத்திலும், எஸ்.ஜே. சூர்யா போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ‘ராயன்’ படத்திற்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதன் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது அடுத்தகட்டமாக மதுரையில் தொடங்கியுள்ளது. தனுஷ் - எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் 'D56'.... மதுரையில் படப்பிடிப்பு தீவிரம்!இந்தப் படப்பிடிப்பில் தனுஷ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா சம்பந்தப்பட்ட முக்கியக் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும் இந்தப் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை நடக்கும் எனவும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ‘D56’ திரைப்படத்தை 2027-ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்குக் கொண்டுவரப் படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

 

MUST READ