Homeசெய்திகள்சினிமாமீண்டும் தெலுங்கு இயக்குநருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்... 'SK29' பட அப்டேட்!

மீண்டும் தெலுங்கு இயக்குநருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்… ‘SK29’ பட அப்டேட்!

-

- Advertisement -

சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள SK29 படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.மீண்டும் தெலுங்கு இயக்குநருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்... 'SK29' பட அப்டேட்!

சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான நடிகராக வலம் வருகிறார். அந்த வகையில், இவர் இப்போது ‘சேயோன்’ படத்தில் நடித்து வருகிறார். முருகப்பெருமானை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
​இதைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தன்னுடைய 27-வது படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், ‘சேயோன்’ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்த பின்னர் ‘எஸ்கே 27’ படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் இணைவார் என்று சொல்லப்படுகிறது. அதன் பிறகு, சமீபத்திய தகவலின்படி சிவகார்த்திகேயனின் 28-வது படத்தை ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளார். இந்தத் தகவல் கிட்டத்தட்ட உறுதியான தகவலாக வெளிவந்து, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கி வருகிறது. ​மீண்டும் தெலுங்கு இயக்குநருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்... 'SK29' பட அப்டேட்!இந்நிலையில், தற்போது ‘எஸ்கே 29’ படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, ‘எஸ்கே 29’ படத்திற்காகத் தெலுங்கு இயக்குநர் ஒருவர் சிவகார்த்திகேயனை அணுகியதாகவும், இது தொடர்பான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சிவகார்த்திகேயன் ‘பிரின்ஸ்’ படத்திற்காக அனுதீப் என்ற தெலுங்கு இயக்குநருடன் கைகோர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, இனிவரும் நாட்களில் SK29 படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
​

MUST READ