Homeசெய்திகள்சினிமாநானி பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன்.... வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

நானி பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன்…. வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

-

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் நானி பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.நானி பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன்.... வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தற்போது ‘சேயோன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து, 2027 முதல் பாதையில் பிரம்மாண்டமாக இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், ‘பார்க்கிங்’ படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தனது 27-வது படத்தில் நடிக்கவும் சிவகார்த்திகேயன் கமிட் ஆகியுள்ளார். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு ஏற்கெனவே முடிந்துள்ள நிலையில், ‘சேயோன்’ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்த பிறகு இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
​அதே சமயம், இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் சிவகார்த்திகேயன், தனது அடுத்த படத்திற்காக ஒரு தெலுங்கு இயக்குநருடன் கூட்டணி அமைக்கப் போவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஏற்கெனவே இவர் ‘ப்ரின்ஸ்’ படத்தில் அனுதீப் என்ற தெலுங்கு இயக்குநருடன் கைகோர்த்திருந்தார். நானி பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன்.... வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!இந்நிலையில், மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குனருடன் கைகோர்க்க உள்ளாராம். தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், அந்த தெலுங்கு இயக்குநர் யார் என்ற அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது நானி நடிப்பில் வெளியான ‘சரிபோதா சனிவாரம்’ படத்தை இயக்கிய விவேக் ஆத்ரேயாவுடன் சிவகார்த்திகேயன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது. ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் SK27 படம் முடிந்த பிறகு, இந்தக் கூட்டணியின் படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

MUST READ