Homeசெய்திகள்சினிமாதனது அடுத்த படத்திற்காக தீவிர உடற்பயிற்சியில் சிம்பு.... வெளியான மாஸ் அப்டேட்!

தனது அடுத்த படத்திற்காக தீவிர உடற்பயிற்சியில் சிம்பு…. வெளியான மாஸ் அப்டேட்!

-

- Advertisement -

நடிகர் சிம்பு தனது அடுத்த படத்திற்காக தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.தனது அடுத்த படத்திற்காக தீவிர உடற்பயிற்சியில் சிம்பு.... வெளியான மாஸ் அப்டேட்!

சிம்பு இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அரசன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில், இப்படத்தை அடுத்த ஆண்டு முதல் பாதியில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சிம்பு தன்னுடைய அடுத்த படத்தை ‘டியூட்’ பட இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக ஏற்கனவே பேச்சு அடிபட்டது. மேலும் இந்த படத்தை தொடங்குவதற்கான முன்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்தப் படம் குறித்த ஒரு மாஸான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கும் இந்தப் படத்தில் சிம்பு ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளாராம். அந்தக் கதாபாத்திரத்திற்கு ஏற்ற உடல் அமைப்பைப் பெறுவதற்காக, சிம்பு தற்போது தீவிர உடற்பயிற்சியில் இறங்கியுள்ளார்.தனது அடுத்த படத்திற்காக தீவிர உடற்பயிற்சியில் சிம்பு.... வெளியான மாஸ் அப்டேட்! தினமும் சுமார் 2 மணி நேரம் ஜிம்மில் கடுமையாக வொர்க்-அவுட் செய்து வருகிறாராம். மேலும், இப்படத்தின் படப்பிடிப்பை 2026 டிசம்பர் மாதத்திலோ, அல்லது 2027 ஜனவரி மாதத்திற்குள்ளோ தொடங்கப் படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

 

MUST READ