Homeசெய்திகள்சினிமாசரத்குமாரின் 177-வது படத்திற்கு ‘டாக்ஸி’ எனப் பெயர் அறிவிப்பு – சென்னையில் பிரமாண்ட அறிமுக விழா!

சரத்குமாரின் 177-வது படத்திற்கு ‘டாக்ஸி’ எனப் பெயர் அறிவிப்பு – சென்னையில் பிரமாண்ட அறிமுக விழா!

-

- Advertisement -

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சரத்குமார் நடிக்கும் 177-வது திரைப்படத்திற்கு ‘டாக்ஸி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

சரத்குமார் இதுவரை 176-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ‘பொன்னியின் செல்வன்’, ‘போர் தொழில்’, ‘பரம் பொருள்’ உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது அவர் நாயகனாக நடிக்கும் ‘டாக்ஸி’ திரைப்படம் அதிரடி ஆக்‌ஷன் என்டர்டெயினராக உருவாகிறது. இப்படத்தை ‘வானம் கொட்டட்டும்’ படத்தை இயக்கிய தனா இயக்குகிறார். இவர் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

சென்னையில் நடைபெற்ற படத்தின் அறிமுக விழாவில் இயக்குநர் மணிரத்னம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இப்படத்தின் கதையை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

நடிகை ராதிகாவின் ரேடான் மீடியா வொர்க்ஸ் உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கல் ரேஸில் இருந்து விலகும் புதிய படம்…. எந்த படம்னு தெரியுமா?

MUST READ