Homeசெய்திகள்சினிமா2027 சம்மரில் நடக்கப்போகும் அடுத்தடுத்த சம்பவம்.... தயாராகும் ரசிகர்கள்!

2027 சம்மரில் நடக்கப்போகும் அடுத்தடுத்த சம்பவம்…. தயாராகும் ரசிகர்கள்!

-

- Advertisement -

2027 சம்மரில் நடக்கப்போகும் அடுத்தடுத்த சம்பவம்.... தயாராகும் ரசிகர்கள்!சமீபத்தில் ‘ஜெயிலர் 2’, சூர்யாவின் ‘சீன்’, தனுஷின் ‘ஓம்’ ஆகிய திரைப்படங்கள் ரிலீஸாகின. அதற்கு அடுத்து 2027 பொங்கலுக்கு பெரிய ஸ்டாரின் படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. அடுத்த நான்கு மாதங்களுக்குத் திரையரங்குகளில் ரசிகர்கள் பிரம்மாண்டமாகக் கொண்டாடும் வகையிலான பெரிய பட்ஜெட் படங்களோ அல்லது முன்னணி ஸ்டார்களின் திரைப்படங்களோ எதுவும் வெளியாக வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் சற்று அதிருப்தியும் ஏமாற்றமும் ஏற்பட்டுள்ளது. ஆனால், இதற்கெல்லாம் சேர்த்து 2027 சம்மரில் பாக்ஸ் ஆபிஸில் பெரிய சம்பவம் நடக்கப்போவதாகத் திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை குறிவைத்து அடுத்தடுத்து பெரிய ஸ்டார்களின் படங்கள் களமிறங்கத் திட்டமிட்டுள்ளன.2027 சம்மரில் நடக்கப்போகும் அடுத்தடுத்த சம்பவம்.... தயாராகும் ரசிகர்கள்! குறிப்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அதோடு, தனுஷின் ‘டி56’ (D56) திரைப்படம் வெளியாகும் என்றும், சிவகார்த்திகேயனின் சேயோன், சூர்யா 48 போன்ற படங்களும் சம்மரில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு வருவதாகவும் நிறைய பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. பல பெரிய படங்களின் படப்பிடிப்பு இன்னும் நிறைவடையாமல் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அவற்றின் வெளியீடு 2027 கோடை விடுமுறைக்குத் தள்ளிச் சென்றுள்ளது.2027 சம்மரில் நடக்கப்போகும் அடுத்தடுத்த சம்பவம்.... தயாராகும் ரசிகர்கள்! இதனால், 2027 சம்மரில் முன்னணி நடிகர்களின் படங்கள் வரிசையாகக் களமிறங்கி ரசிகர்களுக்குப் பெரிய விருந்தளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ரசிகர்களும் அதற்காக இப்பொழுதே தயாராகி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

MUST READ