Homeசெய்திகள்சினிமாபிரபு தேவா நடித்துள்ள 'மூன் வாக்' படத்தின் ட்ரெய்லர் குறித்த மாஸ் அறிவிப்பு!

பிரபு தேவா நடித்துள்ள ‘மூன் வாக்’ படத்தின் ட்ரெய்லர் குறித்த மாஸ் அறிவிப்பு!

-

- Advertisement -

பிரபுதேவா நடித்துள்ள மூன் வாக் படத்தின் ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிரபு தேவா நடித்துள்ள 'மூன் வாக்' படத்தின் ட்ரெய்லர் குறித்த மாஸ் அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் நடிகர், நடன இயக்குநர், இயக்குநர் எனப் பன்முகத் திறமைகளைக் கொண்ட பிரபு தேவா, அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில், மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கத்தில் ‘மூன் வாக்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். நகைச்சுவை கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
பிகைன்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் திவ்யா மனோஜ் மற்றும் பிரவீன் இலக் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். இதில் பிரபு தேவாவுடன் இணைந்து யோகி பாபு, யூடியூபர் சதீஷ், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் ஏ. ஆர். ரகுமானும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தில் ஏ. ஆர். ரகுமானும் பிரபு தேவாவும் இணைந்துள்ளது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஆரம்பத்திலேயே அதிகமாக்கியது. பிரபு தேவா நடித்துள்ள 'மூன் வாக்' படத்தின் ட்ரெய்லர் குறித்த மாஸ் அறிவிப்பு! ஏற்கனவே இப்படத்திலிருந்து அடுத்தடுத்த அப்டேட்களும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன. அடுத்தது இப்படம் வருகின்ற டிசம்பர் 24-ஆம் தேதி ‘மூன் வாக்’ திரைப்படம் திரைக்கு வர முழுவீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் இன்று (நவம்பர் 27) மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

 

MUST READ