Homeசெய்திகள்சினிமாநெல்சன் இயக்கத்தில் ரஜினி - கமல் இணையும் புதிய படம்.... ஷூட்டிங் குறித்த வெளியான அதிரடி...

நெல்சன் இயக்கத்தில் ரஜினி – கமல் இணையும் புதிய படம்…. ஷூட்டிங் குறித்த வெளியான அதிரடி அப்டேட்!

-

- Advertisement -

நெல்சன் இயக்கத்தில் ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.நெல்சன் இயக்கத்தில் ரஜினி - கமல் இணையும் புதிய படம்.... ஷூட்டிங் குறித்த வெளியான அதிரடி அப்டேட்!

தமிழ் சினிமாவின் இருபெரும் நடிப்பு ஜாம்பவான்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் 1975–1985 காலகட்டத்தில் இணைந்து சில படங்களில் நடித்தனர். அதன் பிறகு இருவருமே தனித்தனி சாம்ராஜ்யங்களை உருவாக்கி, இன்றளவும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், பல வருடங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாகக் கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியானது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டு ப்ரோமோ வெளியான நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு விண்ணை முட்டியது. நெல்சன் இயக்கத்தில் ரஜினி - கமல் இணையும் புதிய படம்.... ஷூட்டிங் குறித்த வெளியான அதிரடி அப்டேட்!ஆனால், அதன்பிறகு படப்பிடிப்பு தொடங்கப்படாததால் எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. இதற்கிடையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ‘தர்மன்’ படத்தில் பிஸியாகிவிட்டார். அதேபோல் கமல்ஹாசனும் ‘இந்தியன் 3’, ‘கல்கி 2’, ‘சண்டியர்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
​தற்போது இந்த KHxRK படம் குறித்து பிரபல விநியோகஸ்தர், தயாரிப்பாளர் மற்றும் திரையரங்க உரிமையாளரான திருப்பூர் சுப்பிரமணியன் முக்கியத் தகவல்களை பகிர்ந்துள்ளார்.
​KHxRK படம் 100% நிச்சயமாக உருவாகும் என்றும், இப்படம் கைவிடப்படுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்றும் திருப்பூர் சுப்பிரமணியன் உறுதிபடத் தெரிவித்துள்ளார். நெல்சன் இயக்கத்தில் ரஜினி - கமல் இணையும் புதிய படம்.... ஷூட்டிங் குறித்த வெளியான அதிரடி அப்டேட்!ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தை நிச்சயம் முன்னெடுக்கும் என்றும், 2027 பிப்ரவரி அல்லது மார்ச் 2027-ல் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். மேலும் 2028 பொங்கலுக்கு இப்படம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அப்டேட் கொடுத்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.

MUST READ