Homeசெய்திகள்சினிமாதமிழ் புத்தாண்டை குறிவைக்கும் ரஜினியின் 'தர்மன்'?.... வெளியான புதிய தகவல்!

தமிழ் புத்தாண்டை குறிவைக்கும் ரஜினியின் ‘தர்மன்’?…. வெளியான புதிய தகவல்!

-

- Advertisement -

ரஜினியின் தர்மன் பட ரிலீஸ் குறித்த புதிய அப்டேட் வெளிவந்துள்ளது.தமிழ் புத்தாண்டை குறிவைக்கும் ரஜினியின் 'தர்மன்'?.... வெளியான புதிய தகவல்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம், கிட்டத்தட்ட ரூபாய் 800 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இது தவிர, கமல்ஹாசனுடன் இணைந்து நெல்சன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் ரஜினி நடிக்கப் போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ​இதற்கிடையில், ரஜினி தற்போது ‘தர்மன்’ படத்தில் நடித்து வருகிறார். ரஜினியின் 173-வது படமான இப்படத்தை, ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ படங்களின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்.தமிழ் புத்தாண்டை குறிவைக்கும் ரஜினியின் 'தர்மன்'?.... வெளியான புதிய தகவல்! இப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நயன்தாரா, ராம் பொத்தினேனி, சிம்ரன், ராஷி கண்ணா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், இப்படத்தில் ரஜினி டாக்டர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
​இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் இதன் ரிலீஸ் தேதி குறித்து பல தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. தமிழ் புத்தாண்டை குறிவைக்கும் ரஜினியின் 'தர்மன்'?.... வெளியான புதிய தகவல்!அதன்படி, மகேஷ் பாபுவின் ‘வாரணாசி’ படம் 2027 ஏப்ரல் 7ஆம் தேதியில் இருந்து தள்ளிப்போனால், அந்த தேதியில் ‘தர்மன்’ திரைக்கு வரலாம் என சொல்லப்பட்டது. ​ஆனால், தற்போது கிடைத்த தகவலின்படி, 2027 ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் வெளியாகலாம் எனத் தகவல் கசிந்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் கிளிம்ப்ஸ் வீடியோவுடன் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ