Homeசெய்திகள்சினிமாதாமதமாகும் 'கருப்பு 2'.... எப்போது இணையும் சூர்யா - ஆர்.ஜே. பாலாஜி கூட்டணி?

தாமதமாகும் ‘கருப்பு 2’…. எப்போது இணையும் சூர்யா – ஆர்.ஜே. பாலாஜி கூட்டணி?

-

- Advertisement -

கருப்பு 2 படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.தாமதமாகும் 'கருப்பு 2'.... எப்போது இணையும் சூர்யா - ஆர்.ஜே. பாலாஜி கூட்டணி?சூர்யா தற்போது ‘சீன்’ படத்திற்குப் பிறகு தனது 48-வது படத்தில் நடித்து வருகிறார். ‘ஜெய் பீம்’ படத்தின் இயக்குநர் டி.ஜே. ஞானவேல் இப்படத்தை இயக்குகிறார். இதற்கு அடுத்து சூர்யாவின் 49-வது மற்றும் 50-வது படங்கள் குறித்து சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அதன்படி, சூர்யா 49 படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கப் போவதாகவும், அது அவரது பாணியில் ராவான ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்றும், ‘ஏ’ சான்றிதழ் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, சூர்யாவின் 50-வது படத்தை மதிமாறன் புகழேந்தி அல்லது ஆர்.ஜே. பாலாஜி இயக்கலாம் என்றும், ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் படம் ‘கருப்பு 2’ படமாக இருக்கலாம் என்றும் பேச்சுகள் அடிபட்டன.தாமதமாகும் 'கருப்பு 2'.... எப்போது இணையும் சூர்யா - ஆர்.ஜே. பாலாஜி கூட்டணி?​இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய ஆர்.ஜே. பாலாஜி, ‘சூர்யா 49’, ‘சூர்யா 50’ போன்ற கணக்குகளுக்குள் சிக்க விரும்பவில்லை என்றும், ஆனால் சூர்யாவுக்காக ஒரு ஸ்கிரிப்ட்டை தயார் செய்து வருவதாகவும், சூர்யாவுடன் மீண்டும் இணைவேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், முன்பு வெளியான தகவல்களின்படி ‘கருப்பு 2’ உருவாக இன்னும் குறைந்தது இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம் எனக் கூறப்படுகிறது. எனவே அது உடனடியாக நடப்பதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகத் தெரிகிறது. ​இதன் அடிப்படையில், சூர்யாவின் 49-வது படத்தை அருண் மாதேஸ்வரனும், 50-வது படத்தை மதிமாறன் புகழேந்தியும் இயக்க, ஆர்.ஜே. பாலாஜி, சூர்யாவின் கூட்டணி ‘சூர்யா 51’ படத்தில் இணைய வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ