நடிகர் சூரி, பிக்காசோ பட பாடலை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் தமிழில் கடைசியாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதே சமயம், இவர் தற்போது ‘பிக்காசோ’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தில் சிவராஜ்குமாருடன் இணைந்து அபிஷன் ஜீவிந்த் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான அபிஷன் ஜீவிந்த், தனது முதல் படத்திலேயே நல்ல பெயரையும் புகழையும் பெற்றார். தொடர்ந்து ‘வித் லவ்’ திரைப்படத்தில் கதாநாயகனாகக் களம் இறங்கியிருந்த அபிஷன் ஜீவிந்த், தற்போது ‘பிக்காசோ’ படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார்.
அறிமுக இயக்குநர் கௌதம் சிவராமன் இயக்கும் இப்படத்தில் யோகலட்சுமி, சிவானி நாகரம் ஆகியோரும் நடிக்கின்றனர். டிராமா கம்பெனி மற்றும் கிரீன் காட் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்பைக் கூட்டிய நிலையில், இதன் முதல் பாடலான ‘ஹக்குனா மட்டாட்டா’ இன்று (நவம்பர் 27) மாலை 5:30 மணிக்கு வெளியாகிறது. இந்தப் பாடலை நடிகர் சூரி வெளியிட இருக்கிறார்.
மேலும், இப்பாடலை அபிஷன் ஜீவிந்த் பாடியுள்ள நிலையில், இதன் மூலம் இயக்குநர், நடிகரைத் தாண்டி பாடகராகவும் அவர் அறிமுகமாகிறார். மேலும் ’பிக்காசோ’ திரைப்படம் 2027 ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
