கயடு லோஹர் சமீபத்தில் நடந்த பேட்டியில் சிம்பு குறித்து பேசி உள்ளார்.
நடிகை கயடு லோஹர் கடந்த பிப்ரவரி மாதம் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதாவது தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்தார். அடுத்தது இவர், சிம்பு நடிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் (STR 49) கதாநாயகியாக நடிப்பதற்கு ஒப்பந்தமானார். அதன்படி அறிவிப்பும் வெளியாகி எதிர்பார்ப்புகளையும் அதிகப்படுத்தியது. மேலும் படம் தொடர்பான பூஜையும் சிறப்பாக நடந்து முடிந்தது. ஆனால் சிம்பு தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க இருப்பதால், ராம்குமார் பாலகிருஷ்ணன் படம் தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை கயடு லோஹர், சிம்பு குறித்து சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசியுள்ளார்.
“I’m waiting for #STR49 to come out & people to watch my role🌟. I already did a look test with #SilambarasanTR for #VTK, but i didn’t get a chance to work him🙁. I said that to STR during STR49 Pooja, he said Yeah, i remember, Good ma😀🫶”
– #KayaduLoharpic.twitter.com/wUmcXcNvAK— AmuthaBharathi (@CinemaWithAB) September 29, 2025

அதன்படி அவர், “STR 49 படத்திற்காகவும், மக்கள் என் கேரக்டரை பார்ப்பதற்காகவும் நான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். நான் ஏற்கனவே ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்காக சிம்புவுடன் ஒரு லுக் டெஸ்ட் செய்தேன். ஆனால் அவருடன் அந்த படத்தில் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. STR 49 படத்தின் பூஜை நடைபெற்ற போது தான் சிம்புவிடம் அதை சொன்னேன். அப்போது அவர் ஆமாம் எனக்கு ஞாபகம் இருக்கிறது என்று சொன்னார்” என தெரிவித்துள்ளார்.