பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்தில் விஜய் பட நடிகை இணைந்துள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.
பான் இந்திய நடிகராக வலம் வரும் பிரபாஸ் தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே ‘தி ராஜாசாப்’ திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படம் வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர சலார் 2, கல்கி 2898AD 2 ஆகிய படங்களும் பிரபாஸின் லைன் அப்பில் இருக்கிறது. இதற்கிடையில் இவர், அர்ஜுன் ரெட்டி, அனிமல் ஆகிய படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்காவுடன் கூட்டணி அமைக்கப்போவதாக தகவல் வெளியானது.
மேலும் இவர்களது கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு ஸ்பிரிட் என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. அடுத்தது இந்த படத்தில் பிரபாஸுடன் இணைந்து தீபிகா படுகோன் நடிக்கிறார் என சொல்லப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக திருப்தி டிம்ரி நடிக்கிறார் என சந்தீப் ரெட்டி வங்கா அறிவித்தார். மேலும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் மற்றுமொரு நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடிகை மடோனா செபாஸ்டியன் இந்த படத்தில் இணைந்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என நம்பப்படுகிறது.
நடிகை மடோனா செபாஸ்டியன் மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி தமிழில் பவர் பாண்டி, லியோ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


