பிரபல நடிகை இயக்குனராக மாறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் சுப்ரீம் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் சரத்குமார். இவருடைய மகள்தான் வரலட்சுமி. இவர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘போடா போடி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் சண்டக்கோழி 2, சர்கார் ஆகிய படங்களில் வில்லியாக நடித்து பெயர் பெற்றார். மேலும் இவர் தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் வரலட்சுமி சரத்குமார், இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இவர் இயக்கும் புதிய படத்திற்கு சரஸ்வதி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் வரலட்சுமி, பிரியாமணி, பிரகாஷ்ராஜ், நவீன் சந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தோசா டைரிஸ் நிறுவனத்தின் சார்பில் வரலட்சுமி – பூஜா ஆகிய இருவரும் இணைந்து இதனை தயாரிக்கின்றனர். எட்வின் சகே இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க வெங்கட் ராஜன் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தது இந்த படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் இந்த படம் எந்த மாதிரியான கதைக்களம், படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது போன்ற மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.