Homeசெய்திகள்சினிமாவிரைவில் முடிவுக்கு வரும் 'பராசக்தி' படப்பிடிப்பு?.... வெளியான புதிய தகவல்!

விரைவில் முடிவுக்கு வரும் ‘பராசக்தி’ படப்பிடிப்பு?…. வெளியான புதிய தகவல்!

-

- Advertisement -

பராசக்தி படப்பிடிப்பு விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.விரைவில் முடிவுக்கு வரும் 'பராசக்தி' படப்பிடிப்பு?.... வெளியான புதிய தகவல்!

சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பராசக்தி. இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்களை இயக்கிய சுதா கொங்கரா இயக்குகிறார். இந்த படத்தில் ரவி மோகன் வில்லனாக நடிக்க அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படமானது கடந்த 1950 காலகட்டத்தில் நடந்த இந்தி திணிப்பை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. அதன்படி சிவகார்த்திகேயன் இதில் கல்லூரி மாணவனாக நடிக்கிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்துவருகிறது. மேலும் இப்படம் 2026 ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. விரைவில் முடிவுக்கு வரும் 'பராசக்தி' படப்பிடிப்பு?.... வெளியான புதிய தகவல்!அதேசமயம் படத்தின் படப்பிடிப்புகள் மதுரை, சிதம்பரம், இலங்கை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் வருகின்ற அக்டோபர் 15ஆம் தேதி அல்லது தீபாவளிக்குள் இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகையினால் படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ